Don't Miss!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Finance
மக்களுக்கு நன்றி.. 2வது காலாண்டில் நடந்த மேஜிக்.. மோடி அரசு சொன்ன செம நியூஸ்..!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- News
ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால் என்ன செய்திருக்கிறார் பாருங்க
சென்னை : சமீபத்தில் கர்ப்பத்தை அறிவித்த நடிகை காஜல் அகர்வால், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன இவர் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு ஆகிய படங்களில் நடித்தால். ஆனால் தமிழில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாததாலும், தொடர்ந்து பட வாய்ப்புக்கள் கிடைக்காததாலும் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.
தாயாக
பயிற்சி
எடுத்துக்
கொண்டுள்ளேன்..
கர்ப்பமாக
இருக்கும்
புகைப்படங்களை
பகிர்ந்த
காஜல்
அகர்வால்!

டாப் ஹீரோயின்
தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் செம ஹிட் அடித்ததால் இவருக்கு பல மொழிகளிலும் மவுசு கூடியது. இதனால் மீண்டும் தமிழில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் காஜல் அகர்வால். மாற்றான் படத்திற்கு பிறகு தமிழிலும் பிஸியானார். விஜய், அஜித், தனுஷ், விஷால், ஜெயம் ரவி போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல் அகர்வால்.

திருமணத்திற்கு பிறகும் பிஸி
2020ல் தொழிலதிபர் கெளதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார் காஜல் அகர்வால். தற்போது தமிழில் ஹே சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் ஆச்சாரியா, இந்தியில் உமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

எப்போ குழந்தை பிறக்கும்
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் காஜல் அகர்வால். கர்ப்ப காலத்தில் பெரிய வயிற்றுடன் மாடர்ன் டிரெசில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு அவர்களின் குடும்பத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. காஜல் அகர்வாலுக்கு இந்த ஆண்டு மத்தியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

வயிற்றில் குழந்தையுடன் ஏன் இந்த ரிஸ்க்
இதற்கிடையில் வயிற்றில் குழந்தையுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். மாஸாக மியூசிக்குடன், பெண் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி அளிக்க காஜல் அகர்வால் ஒர்க் அவுட் செய்கிறார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கர்ப்ப காலத்தில் இவர் ஏன் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கிறார் என ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர்.