மெலிந்து டல்லடிக்கும் நயன்தாரா...ஒரே மாதிரி மேனரிசம்.. ஸ்டார் வால்யூ குறைகிறதா?

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய விமர்சனம் செய்தவர்களை விட, நயன்தாரா ஏன் இந்த ஆகி விட்டார் என கேட்டவர்கள் தான் அதிகம். அதிலும் நயன்தாராவின் ஃபேன்சுக்கு இது கொஞ்சம் அப்செட் செய்வதாகவே இருந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

முதலில் வரும் சமந்தா

முதலில் வரும் சமந்தா

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளாக இருக்கும் நயன்தாரா - சமந்தா இணைந்து நடிக்கிறார்கள் என்பது இந்த படத்திற்கு மற்றொரு பலமாக பார்க்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்தில் முதலில் சமந்தா பற்றிய இன்ட்ரோ தான் காட்டப்பட்டிருக்கும். அதற்கு பிறகு தான் நயன்தாராவின் இன்ட்ரோ சீன் இருக்கும். ஒருவேளை முதலிலேயே நயன்தாராவை காட்டி விட்டால் ரசிகர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள் என டைரக்டர் நினைத்து விட்டாரா என தெரியவில்லை.

என்னாச்சு நயன்தாராவுக்கு

என்னாச்சு நயன்தாராவுக்கு

முதலில் வரும் சமந்தா செம கிளாமரான உடைகளில் வருவார். யப்பா...என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு இருக்கும். அடுத்த சீனிலேயே நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். அந்த அளவில் ரொம்பவே மெலிந்து டல்லடித்து காணப்படுகிறார். அண்ணாத்த படத்தில் இருந்ததை விடவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள், ஏன் என்னாச்சு நயன்தாராவுக்கு. ஏன் இப்படி ஆகி விட்டார். அவரின் சமீபத்தில் போட்டோக்களில் இருந்ததை விட இதில் மோசமாக இருக்கிறாரே என கேட்டு வருகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்

லேடி சூப்பர்ஸ்டார் என்ற கெத்து அவரிடம் குறைந்து விட்டதே. அதில் பல சீன்களில் நானும் ரெளடி தான் படத்தில் காட்டிய அதே ரியாக்ஷனே காட்டுகிறார். நயன்தாரா வரும் சீன்களில் படம் கொஞ்சம் டல்லடிப்பதாக ரசிகர்களே கூறுகிறார்கள். நயன்தாராவின் இந்த மாற்றத்திற்கு காரணமாக வயசாவதா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவில்லை.

மார்க்கெட் வால்யூ குறையுதா

மார்க்கெட் வால்யூ குறையுதா

ஆனால் நயன்தாராவின் மார்க்கெட் வால்யூ முன்பை விட தற்போது கொஞ்சம் குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அவரது தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தானாம். நயன்தாராவை விட வயதான நடிகைகள் கூட இளமை தோற்றத்திற்கு மாறி வரும் நிலையில், நயன்தாரா இப்போது வயதானது போன்ற தோற்றத்திற்கு மாறி விட்டாரே என கோலிவுட்டிலேயே பலர் பேசி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X