கல்கி 2898 ADயில் 20 நாட்கள் நடித்தும் தீபிகா படுகோன் வெளியேற காரணம் என்ன? பயங்கர ஸ்கெட்ச் போல!

மும்பை: தீபிகா படுகோன் 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியதை வைஜெயந்தி மூவிஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போது, ஏற்கனவே 20 நாட்கள் தீபிகா நடித்த நிலையில், அவர் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதற்கு என்ன காரணம் என்பதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை என்றாலும், இது குறித்த கிசுகிசுக்களும் ஊகங்களும் ஓய்ந்தபாடில்லை. அப்படி இருக்கும்போது தற்போது அதற்கான காரணம் குறித்து ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

அதாவது கல்கி படத்தின் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், அதில் தீபிகா படுகோனின் போர்ஷன் தான் அதிகம் படமாக்கப்பட்டது என்றும் இயக்குநர் நாக் அஸ்வின் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் தீபிகா படுகோன் படத்தில் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

காரணம் இதுவா?: அவர் விலகியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் படக்குழு தரப்பில் இருந்தோ, தீபிகா படுகோன் தரப்பில் இருந்தோ எதுவும் கூறப்படவில்லை. இதனாலேயே பல யுகங்களுக்கு அது வழிவகுத்துவிட்டது. அதாவது நடிகை தீபிகா படுகோன் ஏற்கனவே, இரண்டாம் பாகத்தில் தனது போர்ஷன் 20 நாட்கள் படமாக்கப்பட்டு விட்டதாலும் முதல் பாகம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாலும் இரண்டாம் பாகத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அவர், சம்பளத்தில் 25 சதவீதம் கூடுதலாக கேட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக தான் தீபிகாவை படக்குழு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

Fans Wonder Why Deepika Padukone Was Ousted Kalki 2 Even Shot For 20 Days Before She Being Dropped
Photo Credit:

ரசிகர்கள் ஷாக்: : வைஜெயந்தி மூவீஸ் தரப்பில் இருந்து, தீபிகா படுகோன் இரண்டாம் பாகத்தில் இருக்க மாட்டார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் பலரும் அந்த கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வையுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் படக்குழு தரப்பில் பாலிவுட்டில் இருந்தே ஒரு நடிகையை இறக்க முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு: தீபிகாவின் விலகல் குறித்து வைஜெயந்தி மூவிஸ் X தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், "கல்கி 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோன் இருக்க மாட்டார் என்பதை இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். மிகவும் யோசித்து, தெளிவாக பரிசீலித்த பிறகு, படத்தில் இருந்து அவர் வெளியேறுவதும் அவர் இல்லாமல் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்தோம். முதல் படத்தை உருவாக்கும் நீண்ட பயணத்திற்குப் பிறகும், ஒரு நல்ல உறவை எங்களால் உருவாக்க முடியவில்லை.'கல்கி 2898 AD' போன்ற ஒரு படத்திற்கு அந்த அர்ப்பணிப்பு இன்னும் நிறைய தேவைப்படுகிறது. அவரது எதிர்கால திட்டங்களுக்கு நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று பதிவிட்டிருந்தனர். தீபிகா படுகோன் இந்த படம் மட்டும் இல்லாமல் மேலும் ஸ்பிரிட் என்ற படத்தில் இருந்தும் விலகியுள்ளார். இவருக்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்து விட்டதாகவும், அதனால் தான் அவர் இப்படியான அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X