»   »  அந்த இரண்டரை மணி நேர நரகம்... காருக்குள் நடந்த கொடூரம் பற்றி பாவனாவின் வாக்குமூலம்!

அந்த இரண்டரை மணி நேர நரகம்... காருக்குள் நடந்த கொடூரம் பற்றி பாவனாவின் வாக்குமூலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: காரில் தன்னைக் கடத்தியவர்கள் இரண்டரை மணி நேரம் செய்த கொடுமை குறித்து நடிகை பாவனா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த பாவனாவை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இரண்டரை மணி நேரம் அவரை காருக்குள்ளேயே வைத்து கொடுமைப்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர்.

FIR of Bhavana abduction case

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை போட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், பாவனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்கு இரவு 7 மணிக்குக் கிளம்பினார். அவருக்கு காரை வழங்கியது லால் கிரியேஷன்ஸ். கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

பயணத்தின்போது கார் ஓட்டுநர் மார்ட்டின் பல எஸ்எம்எஸ்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு உணவு வழங்கும் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது. நெடும்பசேரி விமான நிலைய சந்திப்பின் அருகே இரவு 8.30 மணிக்கு காரை மோதியது வேன்.

கார் நிறுத்தப்பட்டபோது, இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காருக்குள் புகுந்து பாவனாவின் வாயை மூடியுள்ளார்கள். கூச்சல் போடக்கூடாது என்று பாவனாவை மிரட்டி அவரிடமிருந்த செல்பேசி பிடுங்கப்பட்டது.

கலமசேரி என்கிற இடத்தில் ஒருவர் காரிலிருந்து இறங்கியுள்ளார். பிறகு இன்னொருவர் காருக்குள் புகுந்துள்ளார். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார்.

இதன்பிறகு வழக்கில் 5-வது மற்றும் 6-வதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரினுள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் வழியை மாற்றி, கிரில் கேட் உள்ள ஒரு வீட்டுக்கு காரை கொண்டு செல்கிறார்கள். அங்குதான் வழக்கின் மையக் குற்றவாளியான பல்சர் சுனி ( இயற் பெயர் - சுனில் குமார்) காரினுள் முகத்தை மூடியபடி நுழைந்தார். ஓட்டுநரின் இருக்கையில் அவர் அமர்ந்தார். அதற்கு முன்புவரை காரை ஓட்டிவந்த மார்ட்டின் வெளியேறினார். அவரை அந்தக் கும்பல் அழைத்துச் செல்லவில்லை. காகநாடு பகுதிக்கு காரைக் கொண்டு சென்ற பல்சர் சுனி அங்குதான் பாவனாவை பலாத்காரம் செய்துள்ளார்.

மற்றவருக்காக பாவனாவைப் பல்வேறு விதங்களில் புகைப்படமாகவும் வீடியோகவும் எடுக்க பல்சர் சுனி முற்பட்டுள்ளார். அதற்கு பாவனா சம்மதிக்காததால் அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதன்பிறகு காரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் பாவனா.

-இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

English summary
Here is first information report on Bhavana abduction case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil