»   »  பார்வதியின் 'ஃபிளாஷ்'

பார்வதியின் 'ஃபிளாஷ்'

Subscribe to Oneindia Tamil


பாலாவால் பிச்சைக்காரி வேடத்தில் நடிக்க டெஸ்ட் பார்க்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வருத்தத்தை மறந்து, மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து கலக்கப் போகிறார் மலையாளத்து பார்வதி.

மலையாளத் திரையுலகின் ஹாட் தேவதை பார்வதி. சில படங்களில் நடித்துள்ள பார்வதிக்கு அங்கு நல்ல கிராக்கி ஏற்படத் தொடங்கியுள்ளது.

பார்வதியின் இயல்பான அழகு, நடிப்புத் திறமை அறிந்துதான் அவரை தனது 'நான் கடவுள்' பட நாயகியாக்க தீர்மானித்து வரவழைத்து டெஸ்ட் பார்த்தார். ஆனால் பாலாவுக்கு திருப்திகரமாக இல்லாததால், பார்வதியை நிராகரித்து விட்டார்.

பாலா என்ற பெரும் இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டக்க வந்து மட்டக்கென நழுவிப் போன வருத்தத்தில் இருந்தார் பார்வதி. பாலா படத்தில் நடித்திருந்தால் தமிழில் செமத்தியான அறிமுகம் கிடைத்திருக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் நினைத்தது நடக்கவில்லை.

இதனால் ஏமாற்றத்தில் இருந்த பார்வதிக்கு இப்போது லக்கி பிரைஸ் அடித்துள்ளது. மோகன்லாலுடன் ஜோடி சேரும் வாய்ப்புதான் அது.

மோகன்லாலும், அவரது ராசியான இயக்குநரான சிபி மலயிலும் இணைந்து வழங்கப்போகும் ஃபிளாஷ் என்ற படத்தில் தான் லாலுக்கு ஜோடி போடுகிறார் பார்வதி.

சிபியும், லாலும் சேர்ந்து பல வெற்றிப் படங்ளைக் கொடுத்தவர்கள். கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தசரதம் என இந்தப் படங்களின் பட்டியல் நீளமானது.

கடைசியாக இருவரும் இணைந்த படம் தேவதூதன். இப்படம் பெரும் தோல்விப் படமானது. இதையடுத்து இருவருக்கும் உறவு கசந்தது. பிரிந்தனர்.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணையவுள்ளனர். ஃபிளாஷ் படத்தின் ஷூட்டிங் வருகிற 25ம் தேதி கோழிக்கோட்டில் தொடங்குகிறது.

சஸ்பென்ஸ் திரில்லருடன் கூடிய காதல் கதையாம் ஃபிளாஷ். படத்தில் முரளி, ஜெகதி ஸ்ரீகுமார், ஜெகதீஷ், சாய்குமார், சித்திக் என பலரும் உள்ளனர். கிறிஸ்துமஸுக்கு இப்படத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

Read more about: bala, begger, parvathi
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil