»   »  பணம் கேட்டு நடிகை அர்ச்சனாவை காரில் கடத்திய 4 பேர்

பணம் கேட்டு நடிகை அர்ச்சனாவை காரில் கடத்திய 4 பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடிகை ஒருவரை 4 பேர் சேர்ந்து காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம்(22). நடிகை. அவருக்கு ஃபேஸ்புக் மூலம் அனிருத் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் சந்தித்து பேசியது இல்லை.

இந்நிலையில் சேலை விளம்பரத்தில் நடிக்க விருப்பமா என்று அனிருத் கேட்டுள்ளார்.

ரூ.50,000

ரூ.50,000

சேலை விளம்பரத்தில் நடிக்க முன்பணமாக மட்டும் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என்று அனிருத் கூறியதை கேட்டு அர்ச்சனா சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனிருத் விளம்பரம் தொடர்பாக கிளையன்டை பார்க்க ஜுஹு செல்லுமாறு கூறியுள்ளார்.

கார்

கார்

ஜுஹுவில் தனது காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அர்ச்சனா கிளையன்டின் காரில் ஏறியுள்ளார். காரில் இருந்த நான்கு ஆண்கள் சிறிது நேரம் விளம்பரம் பற்றி பேசிவிட்டு பின்னர் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும் அரச்சனாவை விபச்சார வழக்கில் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர்.

கடத்தல்

கடத்தல்

காரில் இருந்த நான்கு பேரும் சிபிஐ அதிகாரிகள் இல்லை என்பதை அர்ச்சனா புரிந்து கொண்டார். ரூ.1 லட்சம் பணம் கேட்டு வீட்டுக்கு போன் செய்யுமாறு அர்ச்சனாவை அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அர்ச்சனா தனது சகோதரருக்கு போன் செய்து ரூ. 50 ஆயிரம் பணத்துடன் விமான நிலையம் வருமாறு கூறியுள்ளார்.

விமான நிலையம்

விமான நிலையம்

விமான நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தனது சகோதரரை அழைக்கும் சாக்கில் காரில் இருந்து இறங்கிய அர்ச்சனா ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பியுள்ளார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் அவர் சிக்கியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆட்டோவில் இருந்து அர்ச்சனாவை கடத்தல்காரர்களில் ஒருவர் வெளியே இழுத்துள்ளார். அர்ச்சனா அலறியதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையே கடத்தல்கார்ரகள் ஜுஹு சென்று அர்ச்சனாவின் காரில் இருந்த வாகன ஆவணங்கள், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகிறார்கள்.

English summary
A small time actress Archana Gautam was kidnapped by four goons in a car in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil