»   »  மீண்டும் கஜாலா

மீண்டும் கஜாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இடையில் காணாமல் போன தற்கொைல முயற்சி புகழ் கஜாலா மறுபடியும் தமிழுக்கு வருகிறார்.

தெலுங்கில் ஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் கஜாலா. அவரது கால்ஷீட்டுக்காக மணவாடுகள் தவம் இருந்த காலம் அது. ஆனால் இடையில் காதலில் சிக்கி இருமுறை தற்கொைலக்கு முயற்சிக்கப் ேபாக, களேபரமாகிப் போன தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், கஜாலாவா, ஓட்ரா ஓட்ரா என்று ஓட ஆரம்பித்தனர்.

கவலையில் மூழ்கிய கஜாலாவை ஆறுதல்படுத்தி, ேதறுதல் கூறி தமிழுக்கு அழைத்து வந்தார் அர்ஜூன். தனது படத்தில் நடிக்கவும் வைத்தார். அர்ஜூனின் ஆறுதல் நிழலில் இளைப்பாறிய கஜாலா மறுபடியும் வாய்ப்பிழந்து வாடிப் ேபானார்.

பின்னர் அமீர் இயக்கத்தில் ராம் படத்தில் நல்ல ேராலில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை வாங்கினார் கஜாலா. அதன் பிறகு எம் மகன் படத்தில் பரத்துக்கு ஜோடியாக வந்து போனார். பின்னர் மீண்டும் ஒரு பிரேக்.

இப்படி இடை இடையே காணாமல் போய் கண்ணாமூச்சி காட்டி வரும் கஜாலா தற்போது இன்னொரு தமிழப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் தூறல். கஜாலாவுக்கு ஜோடி போடுவது ஷாம்.

ஏன் இந்த இடைவெளி, எதற்காக இந்த காத்திருப்பு என்று கஜாலாவிடம் கேட்டால், எல்லாம் நல்ல கதைக்காகத்தான். நான் காத்திருந்தது வீண் போகவில்லை. ராம், எம் மகன் ஆகிய இரு படங்களிலும் நல்ல கேரக்டர் கிடைத்தது. இப்போது தூறல் படத்திலும் தூளான வேடம்தான். இந்தப் படம் என்னைத் தமிழில் தூக்கி நிறுத்தும் பாருங்கள் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

எல்லாம் கிளாமருக்கு மாறிட்டிருக்காங்க, நீங்க எப்படி என்றால், நான் எப்போதும் மிதமிஞ்ச கிளாமரில் நடிக்க மாட்டேன். அதற்கான ஆள் நான் இல்லை. நல்ல கதையாக இருந்தால் நடிப்பேன் இல்லாவிட்டால் அக்கடா என்று வீட்டோடு உட்கார்ந்து விடுவேன் என்கிறார்.

தெளிவுதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil