»   »  வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி

வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கவுதமி.

தாயமாயுடு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆந்திராவை சேர்ந்த கவுதமி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு ஓரிரு படங்களில் நடித்தார்.

மலையாளம்

மலையாளம்

13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாஸனை பிரிந்த பிறகு கவுதமி படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் விஸ்வாசபூர்வம் மன்சூர் மற்றும் இ ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு

தெலுங்கு

தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த கவுதமி முடிவு செய்துள்ளார். தனது தாய் மொழியான தெலுங்கில் கூடுதல் படங்களில் நடிக்க விரும்புகிறார்.

கதை

கதை

தெலுங்கில் நல்ல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் கவுதமி. பிற மொழி படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார் அவர்.

மகள்

மகள்

கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியை தமிழில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்க முயன்றார். ஆனால் சுப்புவை ஹீரோயினாக யாரும் பார்க்காததால் அது நடக்கவில்லை.

English summary
According to reports, Gautami has decided to concentrate more on telugu movies. She is reportedly thinking that she can connect to telugu audience well as telugu is her mother tongue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil