»   »  14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதமி 14 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறார்.

உலக நாயகனை பிரிந்த பிறகு கவுதமி மீண்டும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். தனது மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் கவுதமி மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மலையாள படம்

மலையாள படம்

கவுதமி கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் பி.டி. குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கவுதமி

கவுதமி

மலையாள படத்தில் கவுதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.

கதை

கதை

கதைப்படி கவுதமியும் அவரது மகனும் பாசக்காரர்கள். ஒரு தாயும், மகளும் அவர்களின் வாழ்வில் வரும்போது எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.

ஸ்வேதா மேனன்

ஸ்வேதா மேனன்

விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் ஸ்வேதா மேனன், லியோனா லிஷாய், ரெஞ்சி பனிக்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

English summary
Actress Gautami is returning to Mollywood after 14 long years. She is going to act in director PT Kunju Muhammad's Viswasapoorvam Mansoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil