»   »  கவுதம் கார்த்திக் ரொம்ப குளோஸ்…: லட்சுமி மேனன்

கவுதம் கார்த்திக் ரொம்ப குளோஸ்…: லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பர், ஒவ்வொரு சீன்லயும் பட்டையை கிளப்புவார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

கும்கி தொடங்கி கொம்பன் வரை லட்சுமி மேனனுக்கு இளம் ஹீரோக்கள்தான் ஜோடி சேருகின்றனர். சசிகுமார், விக்ரம்பிரபு, கார்த்தி என பல ஹீரோக்கள் உடன் நடித்திருந்தாலும் விஷால் உடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்த காரணத்தால் கிசுகிசுவில் சிக்கினார்.

ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் படிப்பு, நடிப்பு என்று பட்டையை கிளப்புகிறார். தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றியும், தனக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றியும் அவரே கூறியுள்ளார் படியுங்கள்.

சசிகுமார் – விக்ரம் பிரபு

சசிகுமார் – விக்ரம் பிரபு

சசிகுமார் சார் எது நடந்தாலும் அலட்டிக்கமாட்டார். விக்ரம் பிரபு நல்ல நண்பர். ரெண்டு பேரும் ஒரே படத்துல அறிமுகமானதால, பயம் இல்லாம பேசிப்போம்.

விமல்

விமல்

விமல் இருக்குற இடம் எப்பவும் கலகலன்னு இருக்கும். நேரம் போறதே தெரியாது. ஆனா, கிளாப் அடிச்சு ஷாட் ரெடியானா சீரியஸ் ஆகிடுவார்.

சித்தார்த்

சித்தார்த்

சித்தார்த்தின் மிகத் தீவிரமான ரசிகை நான். ‘பாய்ஸ்' படம் ரிலீஸானப்ப நான் மூணாங்கிளாஸ் படிக்குறேன். சித்தார்த்தை நேர்ல பார்ப்பேன்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல.

வானத்தில் பறந்தேன்

வானத்தில் பறந்தேன்

அவர்கூட நடிச்சது அதிசயமா, ஆச்சரியமா இருக்கு. ‘கும்கியில நல்லா பண்ணீங்க'ன்னு சித்தார்த் வாழ்த்து சொன்னப்ப, வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

விஷால் சீனியரா இருந்தாலும் அன்பா பழகுவார். கவுதம் கார்த்திக் என் வயசுக்காரர் என்பதால் ரொம்ப க்ளோஸ். ஒவ்வொரு சீன்லயும் பட்டயக் கிளப்புறார்.

கொம்பன் கார்த்தி

கொம்பன் கார்த்தி

கார்த்தி இயல்பா பழகுறார். ‘இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா இருக்கே. உன் நடிப்பு யதார்த்தமா இருக்கு என்று பாராட்டினார்.

வித்யாபாலன்

வித்யாபாலன்

எனக்கு வித்யாபாலனை ரொம்பப் பிடிக்கும். ‘டர்ட்டி பிக்சர்', ‘கஹானி'ன்னு வித்யாபாலன் தனியா தெரிஞ்சாங்க. ‘பாபிஜாசூஸ்' படத்துக்காக பல கெட்டப்புல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிரட்டுனாங்க.

நான் அழகா இல்லையோ

நான் அழகா இல்லையோ

எனக்கு நண்பர்கள் அதிகம். இதுவரை யாருமே என்கிட்ட நேர்ல காதலைச் சொன்னதில்ல. சின்ன வயசுல நான் அவ்ளோ அழகா இல்லையோ என்னவோ. என்னைவிட அழகான பொண்ணுங்க நெறைய பேர் இருந்திருக்கலாம். அதனால, என்கிட்ட லவ்வை சொல்லாம விட்டிருக்கலாம்.

காதலிக்க நேரமில்லை

காதலிக்க நேரமில்லை

ஆனா, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காக காதலிக்கணும்னு இல்லை. இப்போதைக்கு எனக்கு காதலிக்க நேரம் இல்லை என்கிறார் லட்சுமி மேனன்.

English summary
Lakshmi Menon who has made a quick mark for herself in Kollywood hesitation to do glamorous roles. Lakshmi Menon has done movies with Sasikumar, Vikram Prabu,Vimal, Siddarth, Vishal and Goutham Karthik is the friendliest actor for her.
Please Wait while comments are loading...