»   »  முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்

முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நானும், ஸ்ரீநாத்தும் நல்ல நண்பர்களாக இருந்தோமே தவிர திருமணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டது இல்லை என்று நடிகை கவுதமி நாயர் தெரிவித்துள்ளார்.

செகண்ட் ஷோ மலையாள படம் மூலம் ஹீரோயின் ஆனவர் கவுதமி நாயர்(25). ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கிய செகண்ட் ஷோ மூலம் தான் துல்கர் சல்மான் ஹீரோவானார்.

இந்நிலையில் கவுதமி ஸ்ரீநாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து கவுதமி கூறும்போது,

நண்பர்கள்

நண்பர்கள்

எங்களின் முதல் படமான செகண்ட் ஷோவில் இருந்தே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் எப்பொழுதுமே எதையுமே திட்டமிடவில்லை. நண்பர்கள் அவ்வளவு தான்.

வாழ்க்கை

வாழ்க்கை

ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது வாழ்க்கையை பகிர்வது குறித்து பேசினோம். நல்ல நண்பரே வாழ்க்கைத் துணையாக வருவதை விட அழகான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன?

திருமணம்

திருமணம்

எங்கள் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இரு வீட்டார் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். செகண்ட் ஷோ படத்துடன் தொடர்புடைய இருவர் இணையும்போது அங்கு துல்கர் சல்மான் இல்லாமலா.

முக்கியம்

முக்கியம்

எனக்கு என் நண்பர்கள் குடும்பத்தார் போன்று. துல்கருக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலை இருந்ததால் அவர் திருமணம் முடிந்தவுடன் கிளம்பிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் நான் என் படிப்பை தொடர்வேன் என்றார் கவுதமி.

English summary
Actress Gauthami Nair who tied the knot with director Srinath Rajendran said that they didn't plan anything and it happened on its own.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil