»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனதைத் திருடி விட்டாய் படத்தில் அறிமுகமாகும் காயத்ரி ஜெயராம் அதற்குள் அவர் ரப்பர் நடிகரின் மனதைத் திருடி விட்டாராம்.

ஸ்பிரிங் மாஸ்டர் பிரபு தேவாவுடன் இணைந்து மனதைத் திருடி விட்டாய் படத்தில் நடித்தள்ள அவர் அந்தப் படத்தில் கிளுகிளுப்பூட்டும் விதத்தில் ஆடிஅசத்தியிருக்கிறாராம். பிரபு தேவாவே மெய் சிலிர்த்துப் போகும் அளவுக்கு ஒத்துழைத்தாராம்.

முதல் படம் வருவதற்குள் அவரைப் பற்றிய வதந்திகள் கோலிவுட்டில் ரிலீசாகி புயலைக் கிளப்பியுள்ளன. அவருக்கும் ஒரு முன்னணி நடிகருக்கும் ரொம்பநெருக்கமான நட்பு வளர்ந்து வருகிறதாம். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அக்கம் பக்கத்தை மறந்து, வெட்கப்படாமல் நடிகையுடன் காதல் மொழிபேசுகிறாராம் அந்த ரப்பர் நடிகர்.

இந்த காதல் தொடர்பாக இரண்டு பேருடைய வீடுகளிலும் புயல் வீசத் தொடங்கியுள்ளதாம். ஆனால் அதைப் பற்றியெல்லாமல் அலட்டிக் கொள்ளாமல்ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும்.

இத்தனைக்கும் ஏற்கனவே, அந்த நடிகர் ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டதாகவும், பின்னர் முன்னணி நிடிகை ஒருவரை காதலிப்பதாகவும் வதந்தியில்சிக்கியவர்.

கால்களை வளைக்கும் கலையில் வல்லவராக விளங்கும் அவர் இப்போது பெண்களை வளைத்துப் போடுவதிலும் பெரிய ஆளாகி விட்டார் போலும்!

பலே, பாலே !

பாலே டான்ஸில் பிரபலமான காயத்ரி ஜெயராம், பாலே கற்றுத் தரும் பெண்ணாகவே ஒருபடத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஸ்.. என்று பெயடப்பட்டுள்ள அந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் காயத்ரி ஜெயராம், இன்னொருவர் ஸ்ருதிகா. இவர் யார் தெரியுமா? அந்தக்கால கலக்கல் காமடியனான தேங்காய் சீனிவாசனின் பேத்தி.

பாலே நடனக் காட்சிகள் அட்டகாசமாக வர வேண்டும் என்பதற்காக சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் காயத்ரி ஜெயராம். இதற்கு முன் கள்ளழகர்படத்தில் ரஷிய நடனக் குழுவினரை வைத்தே பாலே காட்சி ஒன்று இடம் பெற்றது.

ஆனால், ஸ்.. படத்தில் நம்ம ஊரு ஆட்களை வைத்தே காட்சிகளை அமைக்கவுள்ளதால் படு வித்தியாசமாக இருக்குமாம்.

ஸ்.. படத்தை புஷ்பவாசகன் இயக்குகிறார். ஹீரோவாக நடிக்கவுள்ளவர் சூர்யா.

இது வேற கதை:

"ஜோ" நடிகை பயங்கர கோபத்தில் இருக்கிறாராம்.

வாலி படத்தில் பிட் ரோலில் வந்த அந்த நடிகை அந்தப் படத்திற்கு வருவதற்கு முன்பு கோலிவுட் ஏஜென்டுகள் மூலம் சான்ஸ் தேடி ஆல்பம்கொடுத்திருந்தாராம்.

அதைப் பார்த்த சில பிட் படத் தயாரிப்பாளர்கள் பெரிய படத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கு முன் அப்படி, இப்படி ஒரு சில பிட்படங்களில் நடித்தால் எளிதில் வாய்ப்பு வரும் என்று கூறியிருக்கிறார்கள். நல்ல வருமானத்தையும் கூறியுள்ளார்கள்.

அவர்கள் சொன்னதை நம்பிய ஜோ நடிகை துட்டை வாங்கிக் கொண்டு பிட்டில் நடித்துள்ளார். சுமார் 10 நிமிட நேரம் மட்டுமே வரும்அளவுக்கு ஜோ நடித்துள்ளார். அப்புறம் அதை மறந்தும் விட்டார்.

இப்போது நம்பர் ஒன் நிலையில் இருக்கும் சூழ்நிலையில் அந்தப் பிட்டை இப்போது கூடுதலாக சில காட்சிகளை சேர்த்து உலாவிட்டிருக்கிறார்களாம் அந்த பிட் தயாரிப்பாளர்கள். இதனால் ஜோ பெரும் அப்செட்டில் இருக்கிறாராம். அவர்கள் மீது சட்டரீதியாகநடவடிக்கை எடுக்க முடியுமா என்று கோலிவுட் புள்ளிகளிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.

சம்பளக் கதை

லைலா சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றி விட்டாராம்.

வரிசையாக தான் நடித்து வரும் படங்கள் எல்லாம் ஹிட் ஆக, என்ன செய்வதென்று தெரியாமல் சம்பளத்தை ஏற்றி விட்டாராம்.

மேலும், நந்தா வெளியானால் தான் எங்கேயோ போய் விடுவோம் என்று கணக்குப் போட்டு வைத்துள்ள லைலா, இப்போதைக்குபுதுப்படங்கள் எதையும் ஒத்துக் கொள்ளவில்லையாம். நந்தா வெளியான பிறகு சம்பளத்தை உயர்த்திக் கேட்க வசதியாகவே புதுப்படங்கள் எதையும் அவர் இப்போது ஒத்துக் கொள்ளவில்லையாம்.

அதை விட மேலாக, இப்போதெல்லாம் வெறுமனே லூஸ் மாதிரி சிரிக்காமல் கொஞ்சம் நடிக்கவும் முயற்சிக்கப் போகிறாராம்.

வெட்கக் கதை

இது அந்த டைப் வெட்கம் இல்லீங்கண்ணா. இது வேறங்கோ.

த்ரீ ரோஸஸ் என்ற பெயரில் ஒரு படத்தை ரம்பா அம்மணி தயாரிப்பது தெரியுமில்லீங்க. இப்போ அடுத்த படத்திற்கும் அச்சாரம் போட்டுவச்சுடாருங்கோ அம்மணி.

தன்னோட அடுத்த தயாரிப்புக்குத்தான் வெட்கம் அப்படின்னு டைட்டில் செலக்ட் பண்ணியிருக்கிறாரு ரம்பா.

ரம்பா வெட்கப்படாவிட்டாலும் பரவாயில்லை, வெட்கத்தை தயாரித்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil