»   »  காயத்ரி ஜெயராமுக்கு கல்யாணம்

காயத்ரி ஜெயராமுக்கு கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை காயத்ரி ஜெயராமுக்கும், அவரது அந்தமான் காதலர் சமீத்துக்கும் வருகிற 13ம் தேதி அந்தமானில் கல்யாணம் நடைபெறுகிறது.

ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம். முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். குறிப்பாக மஞ்சக் காட்டு மைனா பாட்டில் அவர் போட்ட ஆட்டமும், குலுங்கிய குலுக்கலும் காயத்ரிக்கு ரசிகர் வட்டத்தை சேர்த்து விட்டது.

இந்தப் படத்தின் மூலம் பிரபு தேவாவின் காதல் வலையிலும் அவர் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் திடீரென பிரபு தேவா கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாகவும் பரபரப்பு எழுந்தது. பின்னர் காயத்ரி ஜெயராம் சரிக்கப்பட்டப்பட்டதாக கூறப்பட்டது.

வசீகரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் காயத்ரி. தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோது மலையாளத்துக்குத் தாவினார் காயத்ரி. பின்னர் சன் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் காம்பியராகவும் பணியாற்றிப் பார்த்தார்.

எல்லாம் முடிந்த பின்னர் அவர் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக மாறினார். சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றினார்.

பின்னர் அந்தமானில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக பணியாற்ற ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் சமீத்துக்கும், காயத்ரிக்கும் காதல் மூண்டது.

கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்தக் காதல் இப்போது கல்யாணத்தில் முடியவுள்ளது. இரு வீட்டார் சம்மதத்துடன் மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு இருவருக்கும் அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவில் கல்யாணம் நடக்கிறதாம்.

அதே தீவில் உள்ள பேர்ஃபூட் பீச்சில் வரவேற்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனராம். இரு தரப்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.

ஆனால் காயத்ரி தனது திரையுலக நண்பர்கள், நெருங்கிய நண்பர்களுக்காக ஜூன் மாதம் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவுள்ளாராம்.

சமீத் சென்னையைச் ேசர்ந்தவர் தான். லண்டனில் சிஏ படித்தவர். சென்னையில்தான் இவரது பெற்றோர்கள் வசிக்கிறார்கள்.

கலகலப்பாகட்டும் காயத்ரியின் கல்யாண வாழ்க்கை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil