»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக நல்ல காலம் பிறந்திருக்கிறது காயத்ரி ரகுராமுக்கு.

அட்டகாச அழகும், துள்ளலும், இளமைக் கொண்டாட்டமுமாக கிண் என்று இருந்தாலும் இதுவரை முன்னணிஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு காயத்ரி ரகுராமுக்கு வாய்க்கவே இல்லை.

பிரபு தேவாவுடன் ஹீரோயினாக அறிமுகமானவர்களுக்கு ஏற்பட்ட கதி காயத்ரிக்கும் ஏற்பட்டது. வந்த வேகத்தில்காணாமல் போனார். விகடன், ஸ்டைல், விசில் என எந்தப் படமும் கைகொடுக்கவில்லை. இதையடுத்துதெலுங்கில் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். அர்ஜூனுடன் பரசுராம் படத்தில் கிரணுக்குப் போட்டியாககவர்ச்சி ஆட்டம் போட்டுப் பார்த்தார்.

ஆனால், முன்னுக்கு வர முடியவில்லை. இதனால் கன்னடத்தில் பிரபுதேவாவின் தம்பி ராஜேந்திர பிரசாத் போன்றமுன்னணி ஹீரோக்களுடன் சில நாலாம் தர படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

இருப்பினும் தமிழில் விடா முயற்சியாக தனது தந்தை டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் உதவியால் சான்ஸ் தேடி வந்தார்.அதற்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது. இப்போது முன்னணியில் இருக்கும் தனுஷ் உடன் ஜோடி சேர வாய்ப்புகிடைத்திருக்கிறது.

படத்தை இயக்கப் போவது காதல் கொண்டேனை டைரக்ட் செய்த தனுஷின் அண்ணன் செல்வராகவன் தான்.

இதனால் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் இருக்கிறார் காயத்ரி. இவர் தனுஷுக்கு அக்கா மாதிரி அல்லவா இருப்பார்என்று இப்போதே சந்தேகம் கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கும்பிடுபோடும் தனுஷ்!

இதற்கிடையை தனுஷை தங்களது படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் வட்டாரம் ஆளாய்ப் பறக்கிறது.இதுவரை சுமார் 13 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியாகிவிட்டது. இதுவே பெரிய ரூபா 13 வரைதேறிவிட்டதாம்.

படம் வெளியாகும்போது மீதிக் காசு வரும். மொத்தத்தில் இந்த 13 படங்களிலேயே குறைந்தபட்சம் ரூ. 20 கோடிவரை பார்த்துவிடுவார் என்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க இன்னும் கரன்சி பெட்டிகளோடு தனுஷிடம் கால்ஷீட் கேட்ட தேவுடு காக்கிறார்கள் பலதயாரிப்பாளர்கள். ஆனால், ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிய படங்களை முடிக்கவே 2005ம் ஆண்டு ஆகிவிடும்என்று சொல்லி கையெடுத்து கும்பிட ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil