»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தேவயானியும் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.

தனது கணவர் ராஜகுமாரனுக்கு டைரக்டர் சான்ஸ் தருவதற்காக தானே ஒரு படத்தைத் தயாரித்தார். பல கோடிநஷ்டம். அந்தக் கடனை அடைக்க படாதபாடு பட்டு வருகிறார். எந்த சின்ன ரோலும் கூட செய்யத் தயார் என்றுதூது அனுப்பியும், கல்யாணமான நடிகைக்கு சான்ஸ் கிடையாது என்ற தமிழ் சினிமாவின் சாஸ்திரத்தைச் சொல்லிதிருப்பி அனுப்பிவிட்டார்கள் நம் தயாரிப்பாளர்கள்.

இதனால் சொந்த ஊரான மலையாளத்தில் போய் நடித்தார். அங்கு வருடம் பூராவும் நடித்தாலும் 2 லட்சத்துக்குமேல் தரமாட்டார்கள் சேட்டன்கள். இருந்தாலும் கிடைக்கிற வரை லாபம் என்று போய் நடித்தார். இப்போதுஅங்கும் வாய்ப்பில்லை.பார்த்தார். வேறு வழியே இல்லாமல் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.

விகடனின் தொலைக்காட்சி தொடர்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி வரும் கோலங்கள் என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே தனது வீட்டை இப்போதைய இளம் கதாநாயகன் ஒருவரின் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார்தேவயானி என்கிறார்கள். மீண்டும் ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள தேவயானி அதில் இப்போதையஇளம்புயல் நடிகரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு சம்பளமாக இந்த வீட்டைத் தாரைவார்த்துவிட்டார் என்கிறார்கள்.

தேவயானியின் பாணியை மிக விரைவில் காயத்ரி ஜெயராமும் கடைபிடிப்பார் என்கிறார்கள். மார்க்கெட் சுத்தமாகஇழந்துவிட்ட அவரை டிவிக்கு இழுக்க சில சின்னத்திரை டைரக்டர்கள் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சான்ஸ்களை ஏற்பதா இல்லையா என்று படு குழப்பத்தில் இருக்கிறாராம் காயத்ரி. மிக விரைவில் டிவிக்குப்போய்விடுவார் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஆசாமிகள்.

Please Wait while comments are loading...