»   »  காயத்ரி நினைக்காத நாளில்லை..

காயத்ரி நினைக்காத நாளில்லை..

Posted By:
Subscribe to Oneindia Tamil

காயத்ரி ஜெயராம் நினைவிருக்கிறதா?

நீண்ட போராட்டத்துக்குப் பின் இப்போது தான் அவருக்கு இரு படங்கள் கிடைத்திருக்கின்றன.

அழகிப் போட்டி மூலம் மாடலிங்குக்கு வந்து அப்படியே டிவியில் கம்பியரிங் செய்து கொண்டிருந்த காயத்ரிக்கு தமிழில் நடிக்கஆசை வந்தபோது கோலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்தது. ஆனால், முதலிரண்டு படங்களோடு சரி.

காத்ரியின் உயரமே அவருக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகிவிட குட்டை ஹீரோக்கள் அவரை தவிர்த்துவிட்டனர். ஓல்டுஹீரோக்களுடன் ஜோடி சேர மாட்டேன் என் மெதப்பாய் இவர் கூறியதால் அவர்களும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

அடுத்தடுத்து நடிகைகள் தொடர்ந்து படையெடுத்து கோலிவுட்டை உண்டு இல்லை என்றாக்கிவிட்டதால் காயதிரி எல்லாம்கிட்டத்தட்ட மறந்தபோய்விட்டது தமிழ்த் திரையுலகம்.

ஆனால், காயத்ரி ஜெயராம் மறக்கலையே..

தமிழில் வாய்ப்பு தேடி சலித்துப் போய் மலையாளத் திரையுலகில் கொஞ்ச நாள் குப்பை கொட்டிவிட்டு, கன்னடத்திலும்தெலுங்கிலும் நடித்தார். அங்கும் ஆட்டம் வெகு விரைவிலேயே குளோஸ் ஆகிவிட்டது.

இதையடுத்து கம்பியரிங் தொழிலை மீண்டும் எடுத்தார். கே டிவி மற்றும் மலையாள டிவியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கி வந்தார். இதில் பெரிய அளவில் காசு தேறவில்லை.

நீச்சல் எக்ஸ்பர்ட் ஆன காயத்ரி, தனக்குத் தெரிந்த அந்தத் தொழிலை கையில் எடுத்தார். நட்சத்திர ஹோட்டல்களில்விவிஐபிக்களுக்கு நீச்சல் டிப்ஸ் கொடுத்து வந்தார். இந்தத் தொடர்புகளால் பாரிஸ் வரை செல்லவும், அங்கும் நட்சத்திரஹோட்டல்களில் நீச்சல் சொல்லித் தரவும் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால், இவர் எதிர்பார்த்த அளவுக்கு விருட் என்று துட்டு பார்த்துவிட முடியவில்லை. நீச்சலோடு இணைந்த சிலபலதொல்லைகளும் தொடர்ந்துவர, அதற்கெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சினிமாவிலேயே சான்ஸ் தேடக் கிளம்பிவிட்டார்.

தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், ஹீரோக்களையும் சமயம் பார்த்தும், சமயம் பார்க்காமலும் நேரில் போய் பேசி,கெஞ்சி, கொஞ்சி வரும் காயத்ரிக்கு ஒரு வழியாய் இரண்டு படங்கள் கிளிக் ஆகியுள்ளன.

முதல் பட வாய்ப்பை வழங்கி உதவியிருப்பது ஜெய் ஆகாஷ்.

பிரகாஷ் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நானாக நானில்லை என்ற படத்தில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக புக்ஆகியிருக்கிறார் காயத்ரி ஜெயராம்.

கூடவே இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் ஆஷிமா. விஜய்காந்துடன் ரமணாவில் நடித்துவிட்டு அலாவூதீன் படத்தில்பிரபுதேவாவுடன் கெட்ட ஆட்டம் போட்டாரே அதே ஆஷிமா பல்லா தான்.

காயத்ரியும் மஞ்சக்காட்டு மைனா பாட்டுக்கு பிரபுதேவாவுடன் டான்ஸ் போட்டதோடு காணாமல் போனவர் தான்.

இப்படி பிரபுதேவா ராசியால் வாய்ப்பிழந்த இந்த இரண்டு பேருக்கும் ஜெய் ஆகாஷ் மூலம் மறு வாழ்வு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் சுகன்யா, ஷகீலா, கோவை சரளா, அபினயஸ்ரீ ஆகிய பழைய முகங்களும் நடிக்கிறார்கள். கிட்டத்தட்டஇவர்களுக்கும் நெடு நாட்களுக்குப் பின் ரீ-எண்ட்ரி கிடைத்துள்ள படம் இது.

படத்தை இயக்கப் போவது டைரக்டர் விக்ரமனின் உதவியாளராக இருந்த நம்பி. இவருக்கு இது தான் முதல் படம்.

இரண்டாவது படம் தி சென்னை தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிறம். இதில் காயத்ரி தான் ஹீரோயின். 3 புது ஹீரோக்கள்அறிமுகமாகிறார்கள். இன்னொரு ஹீரோ தேடப்பட்டு வருகிறார். ஆசையிருப்போர் முயற்சிக்கலாம்.

படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். ஜெய் ஆகாசுடன் நடிக்கும் படத்திலும் சக்களத்தியாய் போட்டிக்கு ஆஷிமாநடிக்க, இதிலும் இன்னொரு ஹீரோயினா என்று கொதித்துப் போயுள்ள காயத்ரி தனக்கே படத்தில் முக்கியத்துவம் தருமாறுஇயக்குனருக்கும் தயாரிப்பு பார்ட்டிக்கும் மசாலா போட்டு வருகிறார்.

ரொம்ப நாளைக்குப் பின் கிடைத்த வாய்ப்பு என்பதால் கவர்ச்சியில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறாராம் காயத்ரி. நினைக்காதநாளில்லையிலும் ஆஷிமாவுக்கு குளிர் வரும் அளவுக்கு புகுந்து விளையாடி வருகிறார்.

சமீபத்தில் தான் காயத்ரி ஜெயராமின் அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அப்படியே காயத்ரிக்கும் பெண் பார்க்கும் வேலையைஆரம்பிக்கும் மூடில் இருந்ததாம் இவரது குடும்பம். ஆனாலும், சினிமாவில் நிச்சயம் நான் மீண்டும் சாதிப்பேன் என்றுவீட்டினருக்கு தைரியமூட்டியபடி வாய்ப்பு வேட்டையாடி இந்த சான்ஸ்களைப் பிடித்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil