»   »  காயத்ரி ரகுராம்.. நடிப்புக்கு பை பை..

காயத்ரி ரகுராம்.. நடிப்புக்கு பை பை..

Subscribe to Oneindia Tamil

சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிடலாமா என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் காயத்ரி ரகுராம்.

டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகளான இந்த திமிசு கட்டைக்கு நன்றாக ஆடவும் தெரியும். கொஞ்சம் நடிக்கவும் தெரியும்.நிச்சயமாய் மும்பை வரவுகளைவிட நன்றாகவே நடிக்கக் கூடியவர் தான்.

ஆனால், முதல் படத்தில் பிரபு தேவாவுடன் அறிமுகமானதாலோ என்னவோ அவரது பேர் போன ராசி ஒட்டிக் கொண்டுவிட்டது.தேவாவுடன் நடித்தால் அடுத்து பட வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் என்பது கோடம்பாக்கத்தில் ஒரு ஐதீகம். இதை மூடநம்பிக்கையை முறியடித்தது மிகச் சில நடிகைகளே. ஆனால், காயத்ரி ரகுராம் தப்பவில்லை.

நடிக்க வந்தபோதே இவருக்கும் காயத்ரி ஜெயராமுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. நான் தானே முதலில் காயத்ரி என்றபெயரில் வந்தேன், அப்புறம் இவர் ஏன் இவரும் காயத்ரி என்ற நாமகரணத்துடன் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் எனஆவேசமாக பேட்டியளித்தார்.

கடைசியில் ரெண்டு பேருக்குமே கோடம்பாக்கம் கை கொடுக்கவில்லை. காயத்ரி ஜெயராமாவது கன்னடம், மலையாளம்,மாடலிங், பட்டுச் சேலை விளம்பரம், நீச்சல் பயிற்சி, வெளிநாட்டுக்குப் போய் சேவை என்று தன்னை வேறு வகைகளில்பிஸியாக்கிக் கொண்டார்.

ஆனால், காயத்ரி ரகுராம் நிலைமை தான் ரொம்ப மோசம். தமிழில் விகடன், விசில், பரசுராம் என்ற சில படங்களும், கன்னடத்தில்பிரபுதேவாவின் இளைய தம்பியோடு சேர்ந்து ஒரு படமும் கிடைத்ததோடு சரி. தெலுங்கில் ஓரிரு படங்களோடு ஆட்டம்குளோஸ்.

பின்னர் சுத்தமாக வாய்ப்புக்கள் இல்லை. சினிமாவின் முக்கிய புள்ளியின் மகள் என்பதால் இவரிடம் தங்கள் வேலையை காட்டமுடியாது என்பதாலேயே கோலிவுட் இளவட்ட நடிகர்கள் இவரை ஒதுக்கிவிட்டார்கள்.

நம்பிக்கை தளராமல் வீட்டில் இருந்தபடியே தனக்கு வாய்ப்பு வேட்டையாடிய காயத்ரிக்கு நம்பிக்கை தந்தார் செல்வராகவன்.

சுள்ளான் தனுஷை வைத்து எடுக்கப் போகும் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இவரை ஹீரோயினாக புக் செய்தார் செல்வராகவன்.

அதிரடி ஆட்டம், கவர்ச்சியில் பின்னி எடுக்கும் கேரக்டர் அது. ஆனால், தனுசுக்கு ஜோடி என்பதால் உடம்பை இப்படி பலூன்மாதிரி வைத்திருந்தால் சரியாக இருக்காது. கொஞ்சம் காத்தை இறக்கி விட்டு ட்ரிம் ஆகிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ்தந்தார் செல்வா.

அட, நீண்ட நாள் காத்திருந்தாலும் சரியான மீன் சிக்கியதே என்ற மகிழ்ச்சியில் நான் தான் தனுசுக்கு அடுத்த ஹீரோயின் என்றுகூறிக் கொண்டு ஜிம்முக்கும் வீட்டுக்கும் அலைந்தார் காயத்ரி. வஞ்சனையில்லாமல் வளர்ந்த தனது உடம்பை சாப்பாட்டைமறந்து, ஐஸ்கிரீமை மறந்து பாதிக்கு பாதியாக்கினார்.

ஆனால், தனுசின் கால்ஷீட் இடியாப்ப சிக்கல்கள் சரியாகி அவர் இந்தப் படத்தில் நடிக்க 2 வருடமாகும் என்பதால், அந்தப் படபுராஜெக்ட்டையே அப்படியே சுருட்டி வைத்துவிட்டார் செல்வராகவன். இதை காயத்ரியிடம் சொல்லாமல், இழுத்தடித்ததால்சமீபகாலம் வரை இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவே நம்பிக்கையுடன் காலத்தை கழித்தார்.

அப்படி, இப்படியாக சுமார் 8 மாதங்கள் கடந்துவிட்டன. இனிமேல் இந்தப் படம் தாயராகப் போவதில்லை, அப்படியேஎடுத்தாலும் நம்மை ஹீரோயினாகப் போடுவார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது காயத்ரிக்கு.

இதனால் வெறுத்துப் போய்விட்ட காயத்ரி, பேசாமல் டான்ஸ் மாஸ்டராகிவிடலாமா என்று நினைத்தாராம். ஆனால், அதுசரிப்பட்டு வரவில்லை.

அடுத்து வேறு வாய்ப்புக்களும் இல்லாமல், உடம்பு இளைத்தது தான் மிச்சம் என்ற நிலை உருவாகிவிட பேசாமல் நடிப்புக்குஒட்டுமொத்தமாய் கும்பிடு போட்டுவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.

இந்த நிலையில் காயத்ரியை ஒரு தயாரிப்பாளர் அணுகி, ஒரு சாமி படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார்.என்ன நினைத்தாரோ, அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டாராம் காயத்ரி.

ஆனால், இந்தப் படமும் எப்போது தொடங்கும் என்று தெரியாத சூழல்..

இதனால், தனது நண்பிகளிடம் எல்லாம், அமெரிக்காவுக்கு படிக்கப் போகப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் காயத்ரிரகுராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil