»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இனி மேல் எனக்கு எல்லாமே தமிழ் தான். மலையாளத்தில் சான்ஸ் கிடைத்தாலும் கூட நடிக்க மாட்டேன் என்கிறார்கீது மோகன்தாஸ்.

கேரளத்தில் பிறந்தாலும் கனடாவில் வளர்ந்த கீது மலையாளத்திலும் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

வளர்ந்த பிறகு மலையாளத்தில் பாசிலின் லைப் இஸ் பியூட்டிபுல் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 15 படங்கள்வரை நடித்து முடித்தார். பெயர் தான் கிடைத்தது. சொல்லிக் கொள்ளும்படி பணம் கிடைக்கவில்லை.

ஆனால், தமிழில் நள தமயந்தியில் நடித்ததில் பெயரும் புகழும் நல்ல பணமும் கூடவே சில படங்களில் சான்சும்கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் நல்ல கதைகள் இருப்பது உண்மைதான். ஆனால் லேட்டஸ்ட் டெக்னாலஜியைப்பயன்படுத்துவதிலும், பிரம்மாண்டமாக படம் எடுப்பதிலும், ஆர்டிஸ்களுக்கு பணத்தை அள்ளித் தருவதிலும்,வித்தியாசமான படங்களை எடுப்பதிலும் தமிழுக்குப் பக்கத்தில் மலையாளம் வரவே முடியாது என்கிறார்.

இதனால் இனி தமிழிலேயே அதிகம் கவனம் செலுத்தப் போகிறாராம். மலையாளத்தில் மோகன்லாலைப் பிடிக்கும்,ஆனால், இப்போது கமலைத் தான் ரொம்பப் பிடிக்கும் என்கிறார் கனடாவில் சட்டம் படித்த கீது மோகன்தாஸ்.

கவர்ச்சி காட்டவும் தயார் என்று அறிவித்திருக்கிறார். இதனால் இதுவரை பெயரிப்படாத சில படங்களில் புக்ஆகியிருக்கிறார்.

Please Wait while comments are loading...