»   »  ஹரிணியும் இந்திக்கு

ஹரிணியும் இந்திக்கு

Subscribe to Oneindia Tamil

ஆசின், ஷ்ரியா, சதா வரிசையில் அடுத்து ஜெனீலியாவும் இந்திக்குப் போகிறார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய நடிகைகளின் கனவாக பாலிவுட் இருந்தது. அந்த வாய்ப்பு கிடைத்த பலரும் இந்திக்குப் போனார்கள். ஆனால் தேறியது என்னவோ ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா போன்ற ஒரு சிலர்தான்.

இந்த நிலையில் பாலிவுட் கனவு இப்போதைய இளம் நடிகைகளிடமும் மண்டிக் கிடக்கிறது. சமீப காலமாக பாலிவுட்டுக்குப் போகும் தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முதலில் ஆசின் போனார். அடுத்து ஷ்ரியா போனார். லேட்டஸ்டாக சதா போயுள்ளார். இப்ேபாது ஜெனீலியாவும் போகப் போகிறார்.

ஹரிணியாக பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனீலியா அந்தப் படம் சரிவரப் போகாததால், தமிழில் போணியாகாமல் போய் விட்டார். தொடர்ந்து சச்சின், சென்னைக் காதல் என இரு படங்களில் தலை காட்டியும், ரசிகர்களின் இதய நிழலைக் கூட தொட முடியவில்லை.

இதனால் தமிழை விட்டு விட்டு தெலுங்குக்குத் தாவினார். என்ன ஆச்சரியம், தமிழில் தடுமாறிய ஜெனீலியாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து ஊக்கமளித்தனர். இதனால் தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வருகிறார் ஜெனீலியா.

இந்த நிலையில்தான் இந்தியிலும் நுழைய முயன்று வந்தார் ஜெனீலியா. அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்து இப்போது பழம் கிடைத்துள்ளது. பெயரிடப்படாத ஒரு இந்திப் படத்தில் நடித்து வருகிறார் ஜெனீலியா.

இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் தயாரிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். நார்வே தலைநகர் ஓஸ்லோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர பெரிய வாய்ப்பாக, ஆமிர்கானுடன் ஜோடி போடும் சான்ஸ் கிடைத்துள்ளதாம். கஜினிக்கு அடுத்து ஆமிர் நடிக்கப் போகும் படத்தில் அவருடன் இணைகிறாராம் ஜெனீலியா. (அப்ப ஆசின் இல்லையா)

இந்தப் படத்தை ஆமிர்கானே தயாரித்து இயக்குகிறார். ஆமிருடன் ஜோடி போடுவது மட்டுமல்லாமல், அவரது இயக்கத்திலும் நடிக்கவிருப்பது ஜெனீலியாவுக்கு ஏக சந்தோஷத்தைக் ெகாடுத்துள்ளதாம்.

தற்போது தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடனும், சந்தோஷ சுப்ரமணியம் என்ற படத்தில் ஜெயம் ரவியுடனும் இணைந்து நடித்து வருகிறார் ஜெனீலியா.

சந்தோஷ் சுப்ரமணியம் தெலுங்கில் வெளியான பொம்மரிலு படத்தின் ரீமேக். பொம்மரிலுவிலும் ஜெனீலியாதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் தனது நடிப்புக் கலக்கல் தொடரும் என்கிறார் ஜெனீ.

அப்ப, இனி ஜெனீ காட்டில் ஹனிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil