»   »  என் முன்னாள் மேனேஜர் கிரிதர் என்னை ஏமாற்றிவிட்டார்: த்ரிஷா

என் முன்னாள் மேனேஜர் கிரிதர் என்னை ஏமாற்றிவிட்டார்: த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது முன்னாள் மேனேஜர் கிரிதர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா தனது முன்னாள் மேனேஜர் கிரிதரின் தயாரிப்பில் கோவி இயக்கத்தில் நாயகி படத்தில் நடித்தார். நாயகி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இரண்டு மொழிகளிலுமே படம் பப்படமானது.

த்ரிஷா வேண்டும் என்றே படத்தை விளம்பரப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

நாயகி

நாயகி

த்ரிஷா நாயகி படத்தை விளம்பரப்படுத்தவில்லை. நீங்கள் ஏன் படத்தை விளம்பரப்படுத்தவில்லை என்று ரசிகர்கள் கேட்டதற்கு காரணம் உள்ளது என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

கிரிதர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். நம்பிக்கையின் பேரிலேயே நாயகி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என த்ரிஷா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

கிரிதர் எனக்கு வாக்குறுதி அளித்தபடி இல்லாமல் வேறு மாதிரியாக படத்தை எடுத்தார். அவர் என்னை மட்டும் அல்ல மொத்த படக்குழுவையும் ஏமாற்றிவிட்டார். அதனால் தான் நான் நாயகி படத்தை விளம்பரம் செய்யவில்லை என்கிறார் த்ரிஷா.

கொடி

கொடி

தனுஷுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள கொடி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷா பிசியாக உள்ளார். படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha said that her former manager Giridhar cheated her in connection with the horror movie Nayaki.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil