»   »  நயனதாராவை தேடி வரும் கிளாமர்

நயனதாராவை தேடி வரும் கிளாமர்

Subscribe to Oneindia Tamil
Nayanatara

பில்லா படத்தில் கிளாமராக நடிக்கப் போக, நயனதாராவை தேடி பல கிளாமர் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பில்லா படத்தில் நயனதாரா கிளாமராக நடித்துள்ளார். அதிலும் கருப்பு உடையில் அவர் வரும் கிளாமர் காட்சிகளும், கிளாமர் நடனமும் திரையலகினரிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

பில்லா படத்தில் நடித்தது போலவே எங்களது படத்திலும் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டு பல இயக்குநர்கள் நயனதாராவை அணுகி வருகிறார்களாம்.

தனுஷுடன் அவர் நடித்து வரும் யாரடி நீ மோகினி படத்திலும் செமத்தியான கிளாமர் ஆட்டத்திற்கு கேட்டுள்ளனர். ஆனால் நயனதாரா முடியவே முடியாது என்று கூறி விட்டாராம்.

பில்லா படத்தின் கேரக்டருக்கு கிளாமர் தேவை என்பதால் கிளாமராக நடித்தேன். அதற்காக எல்லாப் படங்களிலும் அப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எனவே கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டாராம்.

இதே பதிலைத்தான் தற்போது தன்னைத் தேடி வரும் இயக்குநர்களிடமும் சொல்லி வருகிறாராம் நயனதாரா.

அதேசமயம், தெலுங்குப் படங்களில் கிளாமராக நடிக்க நயனதாரா மறுப்பதில்லையாம்.

நயனதாராவின் இந்த பாரபட்ச போக்கால் சில இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிருப்தியுடன் உள்ளனராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil