»   »  ஆள் மாஸாக இருந்தாலும்... மோசமான விருது பெறுவதில் ஹாட்ரிக் அடித்த சோனா!

ஆள் மாஸாக இருந்தாலும்... மோசமான விருது பெறுவதில் ஹாட்ரிக் அடித்த சோனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நல்ல உயரம், நச்சென்று கலர்... ஆளை அசத்தும் அழகு.. எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம், மோசமான நடிகை விருது மட்டுமே சோனாக்ஷி சின்ஹாவுக்கு வருடா வருடம் கிடைத்து வருகிறது.

தொடர்ந்து 3வது வருடமாக அவருக்கு மோமசான நடிகை விருது கிடைத்துள்ளது.

வெளிநாட்டைக் காப்பியடித்து

வெளிநாட்டைக் காப்பியடித்து

வழக்கம் போல இதையும் அமெரிக்காவைக் காப்பியடித்துத்தான் நம்மவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

கோல்டன் ராஸ்பெரி

கோல்டன் ராஸ்பெரி

கோல்டன் ராஸ்பெரி.. செல்லமாக தங்க கூமுட்டை என்று சொல்லிக் கொள்ளலாம்... என்பது இந்த விருதின் பெயர். டப்பா படங்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த விருது தருவார்கள்.

அதேபோல இங்கேயும்

அதேபோல இங்கேயும்

அதேபோல பாலிவுட்டிலும் இப்படிப்பட்ட ஒரு விருதைக் கொடுத்து வருகிறார்கள். அதற்குப் பெயர் கோல்டன் கேளா விருது.

மோசமான படம்

மோசமான படம்

இந்த ஆண்டின் மோசமான படமாக ஹம்ஷகல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மோசமான நடிகராக அர்ஜூன் கபூரைத் தேர்வு செய்துள்ளனர்.

மோசமான நடிகை சோனாக்ஷி

மோசமான நடிகை சோனாக்ஷி

மோசமான நடிகை விருது சோனாக்ஷிக்குக் கிடைத்துள்ளது. என்ன சோகம் என்றால் கடந்த 3 வருடமாக இவருக்குத்தான் இந்த விருது தவறாமல் கிடைத்து வருகிறது.

லிங்கா -ஹாலிடே

லிங்கா -ஹாலிடே

லிங்கா, ஹாலிடே, ஆக்ஷன் ஜாக்சன் ஆகிய படங்களுக்காக இந்த விருதாம்.

மோசமான அறிமுகம்

மோசமான அறிமுகம்

ஜாக்கி ஷ்ராபின் மகன் டைகர் ஷ்ராபுக்கு மோசமான அறிமுகம் என்ற விருது, ஹீரோபன்டி படத்துக்காகக் கிடைத்துள்ளது.

மோசமான இயக்குநர்

மோசமான இயக்குநர்

மோசமான இயக்குநர் விருது ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்காக பிரபுதேவாவுக்குக் கிடைத்தது.

ஒய் ஆர் யூ ஸ்டில் டிரையிங் விருது

ஒய் ஆர் யூ ஸ்டில் டிரையிங் விருது

ஒய் ஆர் யூ ஸ்டில் டிரையிங்.. அதாவது நீ ஆணியே புடுங்க வேணாம்.. விருது சோனம் கபூருக்குக் கிடைத்துள்ளது.

பேச்சே வரலை

பேச்சே வரலை

தவறான வசன உச்சரிப்புக்கான விருது மேரி கோம் படத்துக்காக பிரியங்கா சோப்ராவுக்குக் கிடைத்துள்ளது.

English summary
Sonakshi Sinha has got the Golden Kela award for the 3rd time this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil