»   »  சன்னி லியோனை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த ராதிகா ஆப்தே

சன்னி லியோனை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் எந்த நடிக நடிகையரை அதிகம் தேடுகின்றனர், மேலும் என்ன காரணங்களுக்காக தேடி இருக்கின்றனர் போன்ற விவரங்களை கூகுள் வெளியிடும்.

இந்த 2015 ம் ஆண்டில் முதல் அரையாண்டு முடிந்ததைத் தொடர்ந்து தற்போது அதிகம் தேடப்பட்ட நபர்களின் பெயரை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

இந்திய அளவிலான இந்தத் தேடலில் நடிகைகளில் தற்போது முதலிடத்தில் இருக்கிறார் ராதிகா ஆப்தே, மேலும் கடந்த 2 வருடங்களாக முதலில் இருந்த சன்னி லியோனை பின்னுக்குத்தள்ளி இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

என்னென்ன காரணங்களுக்காக ராதிகா ஆப்தேவை ரசிகர்கள் தேடியிருக்கின்றனர் என்று பார்க்கலாம்.

முதலிடம் மக்கள் ஜனாதிபதிக்கு

முதலிடம் மக்கள் ஜனாதிபதிக்கு

கூகுள் தேடலில் ஐ ஆம் கலாம் (நான் தான் கலாம்) என்ற அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் குறும்படம் முதலிடத்தில் இருக்கிறது, குறிப்பாக கடந்த மாதம் முழுவதும் இந்தியர்கள் அதிக அளவில் இந்த குறும்படத்தைத் தேடியிருக்கின்றனர்.

இரண்டாமிடம் ராதிகா ஆப்தே

இரண்டாமிடம் ராதிகா ஆப்தே

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக நடிக்கவிருக்கும் ராதிகா ஆப்தே, ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

கூகுள் தேடலில் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர் சன்னி லியோன். ராகினி எம்.எம்.எஸ் , ஏக் பஹெலி லீலா போன்ற படங்களின் மூலம் மற்றும் அவ்வப்போது ஏதாவது செய்வது போன்ற செயல்களால் கூகுள் தேடலில் சன்னி லியோன் முதலிடத்திலேயே இருந்து வந்தார்.

சன்னி லியோனை முந்திய ரஜினி ஹீரோயின்

சன்னி லியோனை முந்திய ரஜினி ஹீரோயின்

இந்த வருடம் அரையாண்டு முடிந்ததை அடுத்து திடீரென சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி கூகுள் தேடலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ரஜினியின் கபாலி படத்தில் நாயகி, ‘அகல்யா' குறும்படம், நெட்டில் வெளியான ராதிகா ஆப்தேவின் ஆபாச வீடியோக்கள் சர்ச்சை, மேலும் குறும்படத்தின் சென்சார் செய்யப்படாத வீடியோ ரிலீஸ், எல்லாவற்றிற்கும் மேல் ஹண்டர் படம் போன்ற விஷயங்களுக்காக ராதிகாவை அதிகம் தேடியிருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

இந்தத் தேடல் எதுல போய் முடியும்னு தெரியலையே...

English summary
Sunny Leon use to be in top search list on google in India, Recent Statistics Say that Radhika Apte Crossed her is no on top of list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil