»   »  கோபிகாவும் டீச்சர் ஆனார்!

கோபிகாவும் டீச்சர் ஆனார்!

Subscribe to Oneindia Tamil

சினேகாவைத் தொடர்ந்து இப்போது கோபிகாவும் டீச்சராகி விட்டார். நிஜமான டீச்சர் அல்ல, வீராப்பு படத்துக்காக.

டீச்சர் கேரக்டர் என்றாலே கடலோரக் கவிதை ஜெனீபர்தான் (அதாங்க நம்ம பழைய ரேகா) நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு கையில் குடை, நடையில் நளினம், சேலையில் பாந்தம் என்று ஒரு அழகான டீச்சருக்கான முகவரியாக மாற்றிக் ெகாடுத்து விட்டார் பாரதிராஜா.

அதற்குப் பிறகு நிறைய நடிகைகள் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தாலும் இன்னும் அந்த ஜெனீபர் டீச்சர் மனசை விட்டுப் போகவே இல்லை.

ஆனால் பள்ளிக்கூடம் படத்தில் டீச்சர் வேடத்தில் வரும் சினேகா அந்த இமேஜை ெகாஞ்சம் போல ஓவர் டேக் செய்யக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அவரது கேரக்டர் அமைப்பு அப்படியாம். நாம் படித்த பள்ளிக்கூடத்தில் பார்த்த டீச்சரைப் போலவே அப்படி ஒரு இயல்பான கேரக்டராம் சினேகாவுக்கு.

கோகிலா டீச்சர் என்ற வேடத்தில் நடித்து வரும் சினேகா அந்த கேரக்டருடன் ஒன்றிப் போய் டீச்சராகவே மாறி விட்டாராம். கையில் குச்சியோடுதான் படப்பிடிப்புத் தளங்களில் சுற்றிக் ெகாண்டுள்ளாராம்.

இப்போது சினேகாவைப் போலவே கோபிகாவும் டீச்சராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் வீராப்பு படத்தில் கோபிகாவுக்கு டீச்சர் வேடமாம்.

இந்த வேடத்தைப் பற்றி ெசான்னவுடன், தான் படித்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு டீச்சரைப் ேபாய்ப் பார்த்து அவருடன் பேசி அவரது ேமனரிசங்களைக் கவனித்து அவரைப் போலவே தன்னை மாற்றிக் ெகாண்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தாராம். அந்த டீச்சரை கோபிக்கு ெராம்பப் பிடிக்குமாம். இதனால்தான் அவரை இமிடேட் செய்து நடிக்கிறாராம்.

ஜெயிக்கப் போவது யாரு கோகிலாவா, கோபிகாவா? காத்திருந்து பார்ப்ேபாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil