»   »  கோபிகாவுக்கு சிக்குன்குன்யா!!

கோபிகாவுக்கு சிக்குன்குன்யா!!

Subscribe to Oneindia Tamil

துபாய் சென்றுள்ள நடிகை கோபிகா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டுஅங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.

தனது குடும்பத்தினருடன் கோபிகா சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக துபாய் சென்றார். அங்கு போனதும் அவருக்கு கடும் காய்ச்சல் வந்துள்ளது. மேலும் கடுமையான மூட்டு வலியும் ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு கோபிகாவைப் பரிசோதித்த டாக்டர்கள், சிக்குன்குன்யா காய்ச்சல் தாக்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.

ஒரு வாரம் தங்கி மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோபிகா.

இந்த நிலையில் கோபிகாவின் தங்கை கிளினிக்கும் சிக்குன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டதாம். இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு மட்டுமல்லாமல் கோபிகாவின் அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கும் சிக்குன்குன்யா வந்து அவர்களும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனராம். மொத்தத்தில் கோபிகா குடும்பமே சிக்குன்குன்யா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அத்தனை பேரையும் ஒரு வாரம் கழித்துத்தான் அனுப்பப் போவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்புதான் 45க்கும் மேற்பட்ட மலையாள நடிகர், நடிகையர்களுக்கு சிக்குன்குன்யா தாக்குதல் ஏற்பட்டது. மோகன்லால், மம்முட்டி, மீரா ஜாஸ்மின் என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு சிக்குன்குன்யா வந்ததால், மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் துபாய்க்குப் போன இடத்தில் கோபிகாவின் குடும்பமே சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் இந்த நோய் தாக்குதல் மிக அதிகமாக உள்ளது. கேரளத்தில் தான் கோபிகா குடும்பத்தினருக்கும் இன்பெக்ஷன் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil