»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil
சிம்புவின் ஜோடியாக நடிக்கப் போகிறார் கோபிகா.

மலையாளத்தில் சில படங்களில் நடித்த கையோடு சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப்பில் அறிமுகமாகிதமிழில் ஹாட் கேக் ஆகிவிட்டவர் கோபிகா. இவரை கலைப்புலி தாணு தனது அடுத்த படத்துக்கு புக்செய்துவிட்டார்.

அந்தப் படத்தில் ஹீரோ சிலம்பரசனாம்.

பத்து விரல்களைக் காட்டி இவர் சம்பளம் கேட்டாலும் கூட, தமிழ் தவிர தெலுங்கு, கன்னடத்தில் இருந்தும் கூடஅழைப்புகள் குவிந்து வருவதால் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கோபிகா.

அதே நேரத்தில் பெட்டியுடன் வரும் தயாரிப்பாளர்களிடம் எல்லாம் கையை நீட்டிக் கொண்டிருக்காமல், கதையைக்கேட்டுவிட்டு, அது திருப்தி தந்தால் மட்டுமே அட்வான்ஸை வாங்குகிறார்.

மும்பையிலிருந்து வந்து கிடைத்த படத்துக்கெல்லாம் கையை நீட்டிவிட்டு, முடிந்தவரை துகிலுறிந்து ஆடிவிட்டு,அத்தோடு காணாமல் போகும் வகையறா நடிகைகள் மத்தியில் வித்தியாசமாகவே இருக்கிறார் கோபிகா.

கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார். இல்லாவிட்டால் கேரள கும்பிடு போட்டு திருப்பிஅனுப்பி விடுகிறார்.

அழகி படத்தை உல்டா செய்து கன்னடத்தில் எடுக்கப்படும் கனசின லோகா என்ற படத்தில் தமிழில் தேவயானிசெய்த ரோல் கிடைத்திருக்கிறதாம். அதில் நடிக்கப் போவதை ஆசையோடு சொல்லும் கோபிகா, அதே நேரத்தில்நந்திதா தாஸ் நடிச்ச ரோல் கன்னடத்தில் கிடைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என்கிறார் ஏக்கத்துடன்.

எக் காரணம் கொண்டும் கவர்ச்சிப் பக்கம் போக மாட்டாராம். சினிமாவில் சம்பாதிக்க நடிகைகளுக்குக் கிடைத்தஒரு குறுக்கு வழிதான் கவர்ச்சி என்கிறார்.

ரொம்பவே வித்தியாசமாகவே இருக்கிறார் கோபிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil