»   »  தமிழைத் தள்ளும் கோபிகா

தமிழைத் தள்ளும் கோபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Gopika
வர வர கோபிகாவுக்கு தமிழ் பிடிக்காமல் போய் விட்டது. தன்னைத் தேடி வரும் தமிழ்ப் பட வாய்ப்புகளை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

ஆட்டோகிராப் மூலம் நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய கோபிகா அந்த ஒரே படத்தின் மூலம் சட்டென்று உயரத்திற்குப் போனார். அதைத் தொடர்ந்து நிறையத் தமிழ்ப் படங்கள். இதனால் தாய் மொழியான மலையாளத்தில் கூட நடிக்காமல் தமிழே கதி என்று இருந்தார்.

ஆனால் ஒரு அருமையான நாளில் சட்டென்று தமிழை விட்டு விட்டு மலையாளத்திற்குத் தாவினார். அதன் பின்னர் மலையாளத்தில் பிசியானவர் தமிழுக்குத் திரும்புவதை தள்ளிப் போட்டு வந்தார்.

இடையில் எம் மகன் படத்தில் மட்டும் நடித்தார். அதன் பின்னர் தற்போது பிரகாஷ் ராஜின் வெள்ளித்திரை படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னைத் தேடி வரும் தமிழ்ப் பட வாய்ப்புகளை நிராகரிக்க ஆரம்பித்திருக்கிறாராம் கோபிகா.

சமீபத்தில் 3 தமிழ்ப் படங்களை அவர் நிராகரித்துள்ளாராம். கரு. பழனியப்பன் தனது பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிக்க முன்பு கூப்பிட்டார். சேரனுடன் ஜோடியாக நடிக்குமாறு அவர் கோரினார். ஆனால் அப்படத்தை நிராகரித்து விட்டார் கோபிகா.

அதேபோல எம் மகன் இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய படமான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் வேண்டும் என்று தட்டி விட்டு விட்டாராம்.

அதேபோல இன்னொரு முன்னணி தமிழ் இயக்குநர் கோபிகாவை சமீபத்தில் அணுகியபோது அவருக்கும் ஸாரி சொல்லி விட்டாராம் கோபிகா.

அதேசமயம், மலையாளத்தில் மட்டும் வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டு பிசியாக நடித்து வருகிறாராம்.

கோபிகாவுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil