»   »  கோபிகாவின் 'மலபார் வெட்டிங்'

கோபிகாவின் 'மலபார் வெட்டிங்'

Subscribe to Oneindia Tamil
Gopika
முதலில் கால்ஷீட் தர மறுத்து, பின்னர் கதையைக் கேட்டு சொக்கிப் போய் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கோபிகா. இங்கல்ல, கேரளத்தில்.

'கோலிவுட்டார்' கண்டெடுத்த மல்லுவுட் நாயகிகளில் ஒருவர் தான் கோபிகா. ஆட்டோகிராப் படத்தில் சேரனால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கோபிகாவுக்கு தற்போது தமிழிலும் பல திரைப்படங்கள் கைவசம் உள்ளன. ஆனால், தெலுங்கில் தான் அவர் மிக பிஸி.

தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க வந்த பல அழைப்புகளை சமீபகாலமாக கால்ஷீட்டை காரணம் காட்டி மறுத்து வந்தார் கோபிகா (சம்பளம் குறைவில்லையா).

இந் நிலையில் பிரபல இந்தி-மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளர்களாக இருந்த ராஜேஷ் மற்றும் பைசல் ஆகியோர் இணைந்து மலபார் வெட்டிங் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்க வைக்க கோபிகாவை அவர்கள் கொச்சியில் வைத்து சந்தித்தனர். அவரோ நான் ரொம்ப பிஸி பிஸி என்று பினாத்தியுள்ளார்.

நீங்க நடிக்கவே வேண்டாம்.. கதையை கேட்டால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு கதையை சொன்னார்களாம்.

ஆனால், கதையில் சொக்கிப் போன கோபிகா கால்ஷீட் அக்ரீமெண்ட் எங்கே என்று கேட்டு புல்லரிக்க வைத்தாராம். (அப்படி என்ன கதையோ)

இதில் கோபிகாவுக்கு ஜோடியாக இந்திரஜித் நடிக்கிறார்.

ரமேஷ் மாதவ் என்பவர் இந்தப் படத்திற்கு கதை-வசனம் எழுதியுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil