»   »  கோபிகா-விமலா-பார்வதி

கோபிகா-விமலா-பார்வதி

Subscribe to Oneindia Tamil
Parvathymelton
தமிழில் வாய்ப்பிழந்த விமலா ராமன், கோபிகா ஆகியோர் மலையாளத்தில் உருவாகும் கசின்ஸ் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் பார்வதி மெல்டனும் கை கோர்த்துள்ளார்.

மலையாளத்தில் பிரபலமான இயக்குநரான லால் ஜோஸ் இயக்கும் புதிய படம் கசின்ஸ். அவருடன் முதல் முறையாக மோகன்லால் இணைகிறார். அடுத்த ஆண்டு இப்படத்தைத் தொடங்கவுள்ளனர்.

இப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்லாலுடன் பிருத்விராஜ் இணைவதும் இதுவே முதல் முறை. இதுவரை சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்குப் போட்டியாக தனித்து நடித்து வந்த பிருத்விராஜ் முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலுடன் இணைகிறார்.

படத்தில் மூன்று நாயகிகள். கோபிகா, விமலா ராமன் மற்றும் பார்வதி மெல்டன்.

தமிழில் கொடி கட்டிப் பறந்த கோபிகாவுக்கு இப்போது தமிழில் வெள்ளித்திரை மட்டுமே கைவசம் உள்ளது. அதேபோல பொய் படத்திற்குப் பிறகு விமலா ராமனை தமிழ் திரையுலகம் ஆதரிக்கவில்லை. இதனால் அவர் மலையாளத்தில் பிசியாகி விட்டார். அவரும் இப்படத்தில் இருக்கிறார். கூடவே பார்வதியும் நடிக்கவுள்ளார்.

கசின்ஸ், மூன்று நாயகிகளுக்கும் நல்ல பிரேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாலும், மோகன்லால், பிருத்விராஜ் முதல் முறையாக இணைவதாலும் இப்படத்திற்கு மலையாள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil