»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராஃப் கதாநாயகிகளில் ஒருவரான கோபிகாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குவிகின்றன.

துப்பாக்கி, அரிவாள் என ரணகளமாய் தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மயிலிறகால்இதயத்தை வருடுவது போன்ற கதையுடன் ஆட்டோகிராஃப் படத்தை இயக்குனர் சேரன் களமிறக்கினார்.

பொதுவாக சேரன் தமிழ் சினிமா இயக்குனர்களில் வித்தியாசமானவர். 6 பாடல்கள், 5 பைட், கவர்ச்சி நடனம்என்று பார்முலா படங்களில் நம்பிக்கையில்லாமல், ரசிகர்களுக்கு ஏதாவது மெஸேஜ் சொல்ல வேண்டும் என்றுநினைப்பவர். தனது சிந்தனைகளை தைரியமாக சினிமாவிலும், பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் பேட்டியிலும்வெளிப்படுத்தி வருபவர்.

விருமாண்டி (முன்னாள் சண்டியர்) படத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கலாட்டாசெய்தபோது, ஒட்டு மொத்த திரையுலகமும் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்,தைரியமாக கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்.

சினிமாவில் கோளாறு சொல்ல இவர் யார்? நல்ல படம் வரவேண்டும் என்று அக்கறை இவருக்கு இருந்தால்,இவரே காசு போட்டு படம் எடுக்கட்டும். என்னிடம் நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன. இவர் விரும்பும்படியானநல்ல படத்தை இயக்கித் தர நான் தயார். பணம் போட இவர் தயாரா? என்று கேட்டார்.

சேரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்த படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில்,பார்ப்பவர்களையெல்லாம் தங்களது பழைய நினைவுகளில் மூழ்கச் செய்ததுதான் சேரனின் மிகப் பெரியவெற்றியாக அமைந்தது. பார்ப்பவர்கள் எல்லாம் படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்ல, படம் இப்போது பாக்ஸ்ஆபிஸை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.

தனது சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து சேரன் தயாரித்த படம் இது. படம் தோற்றிருந்தால் ஊருக்கேதிரும்பிப் போயிருப்பேன். ஆனால், படத்துக்கு எல்லா சென்டர்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால் போட்டபணத்தைப் போல பல மடங்கு திரும்பி வரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சேரன்.


இதனால் சேரனை விட அதிகக் குஷியில் இருப்பவர் கதாநாயகிகளில் ஒருவரான கோபிகாதான். இதில் கனிகா,மல்லிகா ஆகிய மலையாளத்துக் குட்டிகளும், ஸ்னேகாவும் நடித்திருந்தாலும் கோபிகாவுக்குத் தான் இப்போதுதமிழில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள கண்ணதாசன் என்ற மேனேஜரை நியமிக்கும் அளவுக்குதயாரிப்பாளர்கள் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

விருமாண்டி படத்தில் முதலில் கோபிகாதான் நடிப்பதாக இருந்ததாம். என்ன காரணத்தினாலோ கமல்அபிராமியைக் கதாநாயகியாக்கி விட, கோபிகா சோர்ந்து போனார். இப்போது ஆட்டோகிராஃப் நன்றாகஓடுவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தற்சமயம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் அவர், நல்ல வாயப்புகள்வந்தால் சென்னையில் வீடு வாங்கி நிரந்தரமாக செட்டில் ஆகிவிடும் மூடில் இருக்கிறார்.

இவரது ஒரிஜினல் பெயர் கர்ளி. கேரளத்துக்கு கிருஸ்தவ குடும்பத்துப் பெண். பரநாட்டிய அரங்கேற்றத்தையும்முடித்திருக்கிறார். மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து இப்போது கன்னடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.தமிழில் வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டதால் கன்னடதுக்கு டாடா சொல்லிவிடும் மூடில் இருக்கிறார்.

கொசுறு: ஆட்டோகிராஃப் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கும் கணேசாஉள்பட 2 படங்களில் ஹீரோவாக புக் ஆகியிருக்கிறார் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil