»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

திடீர் கல்யாணம் செய்து கொண்டு, கணவருடன் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருந்து விட்டு, திடீரென்று டிவிப் பக்கம் நடிக்க வந்து,அது போணியாகாமல் போகவே வீட்டில் இருந்த நடிகை கெளதமி இப்போது மீண்டும் வெள்ளித் திரைப் பக்கம்கரை ஒதுங்கி விட்டார், அதுவும் அவரது பேவரைட் ஹீரோ கமலுடன்.

கல்யாணத்திற்குப் பிறகு கொஞ்சம் போல சதை போட்டு விட்ட கெளதமி, அதற்குப் பிறகு சினிமாவில்நடிக்கவில்லை. திடீரென்று சன் டிவியில் வெளியான இந்திரா மெகா தொடரில் நடித்தார்.

ஆனால் தொடர் ஊத்திக் கொண்டதால் கெளதமியை அதற்குப் பிறகு காணவில்லை. வீட்டில் ரெஸ்ட் எடுத்து வந்தகெளதமி இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

தனது ரீஎன்ட்ரியை கமல் மூலம் ஆரம்பித்துள்ளார். கமலுடன் சேர்ந்து கெளதமி நடித்த நம்மவர், தேவர் மகன்,குருதிப் புனல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. மேலும் கமலுடன் மிக நெருங்கி நடித்து ரசிகர்களைகுஜால்படுத்தியவர்.

கமல் ரசிகர்களால் கொஞ்ச காலம் அண்ணி என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

இப்போது அன்பே சிவம் படத்தில் கெளதமிக்கு மீண்டும் வாய்ப்புத் தந்துள்ளார் கமல். இந்தப் படத்தில் முதலில்கெளதமி நடிப்பதாகவே இல்லை. ஆயினும், கமலிடம் கெளதமி நேரில் வந்து சான்ஸ் கேட்கவே, அவருக்காக ஒருவேடத்தை ஒதுக்கியிருக்கியுள்ளாராம்.

வெல்கம் பேக் கெளதமி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil