»   »  வாரணம் ஆயிரம்-வருவாரா தபு?

வாரணம் ஆயிரம்-வருவாரா தபு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு நாயகிகள் இருக்கும் நிலையில் 3வதாக தபுவையும் நடிக்க வைக்க இயக்குநர் கெளதம் மேனன் முயற்சித்து வருகிறாராம்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் வாரணம் ஆயிரம். வேல் படத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட படம் இது. இடையில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் கெளதம் மேனன் தாமதம் செய்ய, வேல் படத்திற்குப் போய் விட்டார் சூர்யா.

தீபாவளிக்கு வேல் வந்து விட்டது. இதையடுத்து வாரணம் ஆயிரம் படத்திற்கு வந்துள்ளார் சூர்யா. இதில், அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் குத்து ரம்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தெலுங்கில் கவர்ச்சிக் காட்டிக் கொண்டிருக்கும் சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் மூலம் தமிழையும் கலக்க வந்துள்ளார். குத்து ரம்யா இப்போது கன்னடத்தில் படு பிரபலமாக இருக்கிறார். பொல்லாதவன் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த அவர், வாரணம் ஆயிரம் தனக்கு பிரேக் ஆக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இந்த நிலையில் படத்தில் 3வது ஹீரோயினை இணைத்துள்ளாராம் கெளதம் மேனன். இந்த கேரக்டரில் நடிக்க தபுவை அவர் அணுகியுள்ளதாக தெரிகிறது. இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார். எனவேதான் தபுவை அணுகியுள்ளேன் என்கிறார் மேனன்.

இதை விட சூப்பர் மேட்டர் என்னவென்றால், கெளதம் மேனனிடம், மும்பையைச் சேர்ந்த மூன்று அழகுப் பெண்கள் உதவியாளர்களாக சேர்ந்துள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil