»   »  நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்

நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளாராம்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் ரஜினி.

இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

ரஜினி படத்தில் நடிக்குமாறு பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆனால் இன்னும் டேட்ஸ் எல்லாம் ஒதுக்கவில்லையாம்.

லிங்கா

லிங்கா

ரஜினியின் லிங்கா படத்தில் வித்யா பாலன் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. கபாலியில் நடிக்க கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் ரஜினி படத்தில் நடிக்க உள்ளார்.

மனசெல்லாம்

மனசெல்லாம்

ஸ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் வெளியான மனசெல்லாம் படத்தில் வித்யா பாலனை தான் முதலில் ஹீரோயினாக போட்டு படப்பிடிப்பை துவங்கினர். வித்யாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று அவரை நீக்கிவிட்டு பின்னர் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

பாலிவுட்

பாலிவுட்

கோலிவுட்டில் நடிக்கத் தெரியவில்லை என்று நிராகரிக்கப்பட்ட வித்யா பாலன் பாலிவுட்டில் நடிப்புக்கு பெயர் போனவர். கான்களுக்கு நிகராக பெயர் எடுத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Bollywood actress Vidya Balan will be Rajinikanth's leading lady in his upcoming movie to be directed by Pa. Ranjith.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil