»   »  இனி ஜென்மத்திற்கும் சிம்புடன் சேர்ந்து மட்டும் நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா

இனி ஜென்மத்திற்கும் சிம்புடன் சேர்ந்து மட்டும் நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி ஜென்மத்திற்கும் சிம்புடன் சேர்ந்து மட்டும் நடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஹன்சிகா.

சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் சேர்ந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். ஆனால் அந்த காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது. காதல் முறிந்த பிறகும் அந்த படத்தில் அவர்கள் சேர்ந்து நடித்தனர்.

காதல் முறிவு பற்றி சிம்பு மட்டுமே மனம் திறந்தார். ஹன்சிகா அமைதி காத்தார்.

ஹன்சிகா

ஹன்சிகா

சிம்புவை பிரிந்த பிறகு ஹன்சிகா தன் பாட்டிற்கு படங்களில் நடித்து வருகிறார். சிம்புவும் படங்களில் மிகவும் பிசியாகவே உள்ளார். இந்நிலையில் தான் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

சிம்பு

சிம்பு

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து படக்குழுவினர் ஹன்சிகாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது.

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

எத்தனை கோடி கொடுத்தாலும் இனி சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஹன்சிகா. அதனால் சிம்புவுடன் நடிக்க வந்த வாய்ப்பை வாசலோடு விரட்டிவிட்டாராம்.

அப்படியா?

அப்படியா?

ஒரு பக்கம் ஹன்சிகா சிம்பு பட வாய்ப்பை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மறுபக்கம் படத்தின் இயக்குனரோ நாங்கள் ஹன்சிகாவிடம் நடிக்க வருமாறு கேட்கவே இல்லையே என்கிறார்.

English summary
Buzz is that Hansika has decided not to share screen space with former boy friend Simbu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil