»   »  அய்யோ பாவம், மனிதன் படத்திற்காக ஹன்சிகா இவ்ளோ செய்தாரா?

அய்யோ பாவம், மனிதன் படத்திற்காக ஹன்சிகா இவ்ளோ செய்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதன் படத்திற்காக ஹன்சிகா தான் அடிக்கடி சிரிப்பதை நிறுத்திக் கொண்டு அமைதியாக இருந்துள்ளார். எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளவர் ஹன்சிகா. அவர் பாட்டுக்கு சத்தமே இல்லாமல் படங்கள் மேல் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர்களும் ஹன்சிகாவை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த மனிதன் படம் பற்றி ஹன்சிகா கூறுகையில்,


பப்ளி

பப்ளி

நான் நிஜ வாழ்க்கையில் எப்பொழுதும் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் பப்ளி பொண்ணு. எனது படங்களிலும் பெரும்பாலும் அதே கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறேன். நிஜ வாழ்க்கையில் இருப்பதை போன்று தான் படத்திலும் வருகிறேன்.


மனிதன்

மனிதன்

மனிதன் படத்தில் எனது கதாபாத்திரம் வித்தியாசமானது. பப்ளி கிடையாது. அமைதியாக இருக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். இது போன்ற கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்தது இல்லை.


சிரிக்காதே

சிரிக்காதே

கதாபாத்திரத்தோடு நான் ஒன்ற வேண்டும் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் சிரிக்கக் கூடாது என்று இயக்குனர் அகமது என்னிடம் கூறினார். நிஜத்தில் என்னால் சிரிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் இந்த படத்திற்காக சிரிப்பை அடக்கினேன்.


இளம் வயதில்

இளம் வயதில்

நான் நடிக்கும் படங்கள் திருப்திகரமாக உள்ளன. 24 வயதில் நான் வெற்றிகரமான நடிகையாக உள்ளேன். இந்த இளம் வயதில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனக்கு கனவு கதாபாத்திரம் என்று எல்லாம் எதுவும் இல்லை.


English summary
Hansika Motwani has come out of her comfort zone for her movie with Udhayanidhi Stalin titled Manithan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil