»   »  முதலில் த்ரிஷா, அடுத்து விஷால், இப்போ ஹன்சிகா

முதலில் த்ரிஷா, அடுத்து விஷால், இப்போ ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் வில்லனாக நடிக்கும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார் ஹன்சிகா.

கேரளாவில் இருந்து ஏராளமான நடிகைகள் கோலிவுட் வருகிறார்கள். தமிழ் படங்களில் நடிப்பதை தங்களின் கனவாக வைத்துள்ளனர் பல கேரளா நடிகைகள். இந்நிலையில் தமிழ் திரையுலகினர் மலையாள திரையுலகிற்கு படையெடுக்கும் டிரெண்ட் துவங்கியுள்ளது.

அந்த டிரெண்டில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளவர் நடிகை ஹன்சிகா.

ஹன்சிகா

ஹன்சிகா

தமிழ், தெலுங்கு திரையுலகில் கொடி கெட்டிப் பறந்த ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் வருவது இல்லை. இந்நிலையில் நேற்று வெளியான போகன் படம் அவருக்கு கை கொடுத்துள்ளது.

மலையாளம்

மலையாளம்

தமிழ், தெலுங்கில் வாய்ப்பு இல்லாத நேரத்தில் ஹன்சிகா மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். அதுவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் படத்தில்.

விஷால்

விஷால்

விஷாலும் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார். இதே படத்தில் தான் ஹன்சிகாவும் நடிக்கிறார்.

த்ரில்லர்

த்ரில்லர்

த்ரில்லர் படமான இந்த மோகன்லால் படம் மூலம் விஷாலும், ஹன்சிகாவும் மல்லுவுட்டுக்கு சேர்ந்தே செல்கிறார்கள். படப்பிடிப்பு வரும் 27ம் தேதி துவங்குகிறது.

English summary
Hansika goes to Mollywood with Vishal in Mohanlal's upcoming movie to be directed by B. Unnikrishnan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil