»   »  சாலையோர மக்களுக்கு 'போர்வைகள்' வழங்கிய ஹன்சிகா - வைரல் வீடியோ!

சாலையோர மக்களுக்கு 'போர்வைகள்' வழங்கிய ஹன்சிகா - வைரல் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலையோரம் தங்கியிருந்த மக்களுக்கு நடிகை ஹன்சிகா போர்வைகள் வழங்கி உதவியிருக்கிறார்.

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தற்போது ஜெயம் ரவி, அரவிந்த் சாமியுடன் இணைந்து 'போகன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் ஹன்சிகா ஆர்வம் காட்டி வருகிறார். மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் ஹன்சிகா மேலும் பல போது சேவைகளையும் செய்து வருகிறார்.

தற்போது சென்னையில் சாலையோரம் படுத்திருக்கும் மக்களுக்கு ஹன்சிகா இரவில் சென்று போர்வைகள், தண்ணீர் ஆகியற்றை வழங்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இரவு நேரத்தில் ஹன்சிகாவே நேரடியாக சென்று உதவியதைப் பார்த்து பலரும் ஹன்சிகாவுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Hansika Given blankets and Drinking Water for Roadside Peoples.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil