»   »  ‘பப்ளி’ ஹன்சிகாவுக்கு இன்று 25வது பர்த்டே... எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க!

‘பப்ளி’ ஹன்சிகாவுக்கு இன்று 25வது பர்த்டே... எப்டி கொண்டாடி இருக்கார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள நடிகை ஹன்சிகா இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. கோயில் கட்டிக் கொண்டாடிய குஷ்புவின் சாயலில் இருந்ததால், ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

அழகாலும், தனது துறுதுறு நடிப்பாலும் குறுகிய காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் ஹன்சிகா.

பேய் வேடம்...

பேய் வேடம்...

தமிழில் முன்னணியில் உள்ள போதே, அரண்மனைப் படத்தில் பேய் வேடத்தில் நடித்து மற்ற நடிகைகளை வியப்பில் ஆழ்த்தினார். அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்தார்.

வெற்றிப்பட நாயகி...

வெற்றிப்பட நாயகி...

'ஒருகல் ஒருகண்ணாடி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சிங்கம் 2', 'மான் கராத்தே', 'அரண்மனை' 'ரோமியோ ஜூலியட்' என தொடர்ந்து வெற்றிப்பட நாயகியாக வலம் வருகிறார் ஹன்சிகா.

சமூகசேவை...

சமூகசேவை...

வலது கை செய்வதை இடது கை அறியக் கூடாது என்பது போல, ரகசியமாக சமூக சேவைகளையும் செய்து வருகிறார் இவர். தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போது குழந்தைகளை தத்தெடுத்து வரும் ஹன்சிகாவிடம் தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு...

மேலும் தனது சொந்த செலவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்து பெண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமைப்புக்கு இவர் பிராண்ட் அம்பாசிடராகவும் விளங்கி வருகிறார்.

ஆதரவற்றோர் இல்லம்...

ஆதரவற்றோர் இல்லம்...

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இல்லம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ள ஹன்சிகா, இதற்காக மும்பை அருகே நிலம் ஒன்றையும் வாங்கி வைத்துள்ளார்.

வைரல் வீடியோ...

சமீபத்தில் சென்னையில் சாலையோரம் படுத்திருந்தவர்களுக்கு போர்வை உள்ளிட்ட பொருட்களை இரவில் ரகசியமாக ஹன்சிகா வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நிவாரண நிதி...

வெள்ள நிவாரண நிதி...

சென்னையில் கடந்த ஆண்டு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னை மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது ரூ.15 லட்சம் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்...

பிறந்தநாள் கொண்டாட்டம்...

இந்நிலையில் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹன்சிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் உள்ள வீடியோவில் தன் அம்மா தனக்கு தலை வாரி விடும் காட்சிகள் உள்ளது. ‘25 வயது ஆனாலும் அம்மாவைப் பொருத்தவரை தான் சின்னக் குழந்தை தான்' எனத் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

திறமை, அழகு மற்றும் சமூக சேவை செய்யும் குணம் ஆகியவை ஒருங்கே பெற்றவரான ஹன்சிகா, இனி வரும் காலங்களில் இன்னும் புகழ் பெற நாமும் அவரை வாழ்த்துவோம்.

English summary
Hansika Motwani turns 25 today. The beauty just shared a couple of pictures and videos on Instagram to let her fans know how she’s celebrating her 25th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil