»   »  சமூக சேவை புரியும் ஹன்சிகா : இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு

சமூக சேவை புரியும் ஹன்சிகா : இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை ஹன்சிகா இளம் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி இவருக்கு மார்ச் 1ம் தேதி இந்த விருது வழங்கப்பட உள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா. இவர் 6 வயதிலிருந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான ஹன்சிகா, தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார்.

நடிகையாக இருந்தாலும் சமூக சேவைகள் செய்வதில் ஆர்வமுள்ளவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். விரைவில் நிரந்தரமா ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஜூனியர் குஷ்புவான ஹன்சிகா

ஜூனியர் குஷ்புவான ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் "மாப்பிள்ளை" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஜூனியர் குஷ்புவாக இடம் பிடித்தார்.

முதலில் சொதப்பல் பின்னர் கலக்கல்

முதலில் சொதப்பல் பின்னர் கலக்கல்

ஆரம்பத்தில் தமிழில் நடித்த படங்கள் சொதப்பினாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி ராசியான நடிகையாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல படங்கள் வரிசையாக புக் ஆகியுள்ளன. இருந்தாலும் எதையும் ஒதுக்கி தள்ளாமல் ஒத்துக்கொண்டார் ஹன்சிகா

ஒரே நேரத்தில் 8 படம்

ஒரே நேரத்தில் 8 படம்

தற்போது சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் 8 படங்களில் நடிக்கும் ஒரே ஹீரோயின் இவர்தான்.ஒரு படத்தில் கூட கால்ஷீட் சொதப்பலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகளுக்கு விருது

சாதனைகளுக்கு விருது

இந்நிலையில் ஹன்சிகாவின் திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி பிரபல பெண்கள் இதழான ஜே.எப்.டபிள்யூ (ஜஸ்ட் ஃபார் வுமன்) இதழ் ஹன்சிகாவை இளம் சாதனையாளராக தேர்வு செய்து அறிவித்துள்ளது.

சரோஜாதேவி, த்ரிஷா விருது

சரோஜாதேவி, த்ரிஷா விருது

ஹன்சிகாவுடன் நடிகைகள் சரோஜாதேவி, த்ரிஷா, சமூக சேவகர்கள் சுஜாதா மோகன், அலமேலு வள்ளி, விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல் விஞ்ஞானி தாமஸ் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். வரும் மார்ச் 1ந் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Hansika Motwani is a very busy actress in two film industries, Kollywood and Tollywood. Hansika began her career by acting in television serials, Shaka Laka Boom Boom and Des Mein Niklla Hoga Chand. She appeared as one of the children in Koi Mil Gaya with Preity Zinta and Hirthik Roshan. She holds a leading position in the Tamil industry, among other heroines.Hansika, at the age of 21, will be receiving the achiever’s award along with veteran actress Saroja Devi, Trisha Krishnan, scientist Tessy Thomas and others, who are collecting their awards for their achievements in their respective fields. The awards night will be a star-studded affair.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more