»   »  பழசை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் சிம்புவை லவ்வும் ஹன்சிகா?

பழசை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் சிம்புவை லவ்வும் ஹன்சிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக செய்தி வெளியானது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படத்தில் ஸ்ரேயா சரண் உள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஒரு நடிகையை ஆதிக் தேடி வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

மீண்டும் ஹன்சிகா

மீண்டும் ஹன்சிகா

வாலு படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்து பிரிந்தவர்கள் சிம்புவும், ஹன்சிகாவும். இந்நிலையில் முன்னாள் காதலர்கள் மீண்டும் ஜோடி சேரப் போவதாக வெளியான தகவலால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது.

ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்பு படத்தில் ஹன்சிகாவா?. இது போன்ற தகவல் எங்கிருந்து கிடைக்கிறது என்றே தெரியவில்லை. என் படத்தில் நிச்சயம் ஹன்சிகா இல்லை என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு

முதல்கட்ட படப்பிடிப்பு

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நினைத்ததை விட வேகமாக முடிந்துவிட்டது. சிம்பு அருமையாக நடித்துக் கொடுத்துள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். அதற்கு முன்பு இரண்டாவது ஹீரோயின் தேர்வு செய்யப்படுவார் என்கிறார் ஆதிக்.

சென்னை, துபாய்

சென்னை, துபாய்

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை அல்லது துபாயில் நடக்கும். முதல்கட்ட படப்பிடிப்பு மிகவும் திருப்திகரமாக முடிந்துள்ளது. முதல்கட்டமாக திண்டுக்கல்லில் காட்சிகளை படமாக்கினோம். பல காட்சிகளை செட் போட்டு படமாக்கினோம் என்று ஆதிக் கூறியுள்ளார்.

English summary
Anbanavan Asaradhavan Adangadhavan (AAA) director Adhik Ravichandran said that he has not finalised Hansika for his movie with Simbu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil