»   »  கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை... கதைதான் முக்கியம்! - ஹன்சிகா

கதாநாயகன் யாரென்று பார்ப்பதில்லை... கதைதான் முக்கியம்! - ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு வரை ஓஹோன்றுதான் இருந்தது ஹன்சிகாவின் சினிமா கிராப். ஆனால் இப்போது கையில் ஓரிரு படங்கள்தான். இத்தனைக்கும் ரொம்ப கெடுபிடி காட்டாமல், கொஞ்சம் தாராள மனசு கொண்டவர் எனப் பெயரெடுத்த நாயகி இவர்.

புரமோஷன்களுக்குக் கூட அவ்வப்போது வருவார். ஏழெட்டு மணி நேரம் இருந்து மீடியாக்களுக்கு பைட்ஸ் கொடுப்பார். ஆனாலும், வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாதது, வருத்தப்பட வைத்திருக்கிறது அம்மணியை.

Hansika's re entry in Telugu

தமிழில் நிலைமை இப்படி இருக்க, மீண்டும் தெலுங்குப் பக்கம் போனவருக்கு கைமேல் பலன். மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு படம். அந்தப் படத்தின் பிரஸ் மீட்டில் ஹன்சிகாவிடம், 'படம் அதிகமாக இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?' என்று கேட்டதற்கு, "அப்படி எதுவும் இல்லை. நான்கைந்து படங்களை ஒரே நேரத்தில் செய்வதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஒரே படம் என்றாலும் நிறைவாகச் செய்ய வேண்டும்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் எப்போதுமே யார் ஹீரோ என்று பார்ப்பதில்லை. கதைதான் எனக்கு முக்கியம். சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்பதில் நம்பிக்கை இல்லை.

நிறைய கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறார்கள். நீங்கள் அப்படி இல்லையே என்று கேட்கிறார்கள். நான் எதற்கு அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும்? எனக்கு 25 வயதுதான் ஆகிறது. சின்ன பெண். எனக்கு வயதான பிறகு அதுமாதிரி படங்களில் நடிக்கலாம்," என்றார்.

அதுவும் சரிதான்!

English summary
Actress Hansika has signed a movie in Telugu with Manchu Vishnu, after drying offers in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil