TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா
சண்டிகர்: திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்து வரும் படம் 'மான் கராத்தே'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது.
அங்கு நிலவி வரும் கடும் மூடும்பனியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அப்படத்தின் கதாநாயகியான ஹன்சிகா குளிரையும் பொருட்படுத்தாது, லுங்கி மற்றும் சட்டை அணிந்து டான்ஸ் ஆடியுள்ளாராம்.
கடும்பனி....
பார்வையையே மறைக்கும் அளவிற்கு கடும் மூடுபனியும், போக்குவரத்தை சீர்குலைக்கும் மோசமான வானிலையும் பஞ்சாபில் நிலவி வருகிறது. வானிலை தெளிவாக இல்லாத காரணத்தால் சண்டிகருக்கு வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் மூடுபனியால் எதிரில் இருப்பவற்றையே பார்க்கமுடியாத நிலை அங்கு நிலவுகின்றது. சண்டிகரிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே உள்ளது.
கோதுமை வயல்....
ஆனால் இந்தத் திரைப்படக்குழுவோ சண்டிகரிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் குறைந்த அளவில் வீடுகளைக் கொண்ட கோதுமை வயல்களில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. தினமும் சண்டிகரிலிருந்து இந்தக் குழுவினர் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
பாடல் காட்சிகள்....
சிவகார்த்திகேயனும், ஹன்சிகா மோத்வானியும் அங்கு இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்களாம்.
லுங்கி டான்ஸ்....
இங்கு எடுக்கப்பட்டுவரும் ஒரு பாடல் காட்சிக்கு பிருந்தா மாஸ்டர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளார். இதில் ஹன்சிகா லுங்கி சட்டையுடன் நடனமாடும் காட்சி ஒன்று படமாக்கப் பட்டுள்ளதாம்.
தொழில்பக்தி....
கடும் குளிரையும் பொருட்படுத்தாது, லுங்கி அணிந்து நடித்துக் கொடுத்துள்ள ஹன்சிகாவின் தொழில் பக்தியை பாராட்டினார்களாம் படக்குழுவினர்.