»   »  சுந்தர்.சி இயக்கத்தில் 3வது முறையாக ஹன்சிகா... இம்முறை விஷால் ஜோடியாகிறார்!

சுந்தர்.சி இயக்கத்தில் 3வது முறையாக ஹன்சிகா... இம்முறை விஷால் ஜோடியாகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஹன்சிகா. இப்புதிய படத்தில் விஷால் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட்டிக் குஷ்பூ எனச் செல்லமாக அழைக்கப் படும் நடிகை ஹன்சிகா, உண்மையான குஷ்புவின் கணவரான இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சியின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சுந்தர். சி யின் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அந்தப் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த பிறகு ஹன்சிகாவுக்கு சுந்தர். சி யையும், சுந்தர். சி மற்றும் குஷ்புவுக்கு ஹன்சிகாவையும் பிடித்துப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

தீயாக வேலை செய்த ஹன்சிகா...

தீயாக வேலை செய்த ஹன்சிகா...

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கி நடித்து வரும் அரண்மனை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் ஹன்சிகா. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

புதிய படம்...

புதிய படம்...

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார் சுந்தர்.ஜி. இப்புதிய படத்தில் நாயகனாக விஷாலும், நாயகியாக ஹன்சிகாவும் நடிக்கிறார்களாம்.

ரொம்ப சந்தோஷம்....

ரொம்ப சந்தோஷம்....

இத்தகவலை ஹன்சிகா உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆமாம், நான் சுந்தர்.சி சாரின் இயக்கத்தில் விஷால் நாயகியாக நடிக்கவுள்ளேன். மூன்றாவது முறையாக சுந்தர்.சி சாரின் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் நடிகை...

முதல் நடிகை...

பெயரிடப்படாத இப்புதிய படத்தில் நடிப்பதன் மூலம், சுந்தர். சியின் மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்த ஒரே நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஹன்சிகா.

இதற்காகத் தான்...

இதற்காகத் தான்...

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் வரலட்சுமி நடித்த மத கஜ ராஜா தயாரிப்பாளரின் கடன் சுமையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அந்த காரணத்துக்காகவே மீண்டும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பதில் விஷால்- சுந்தர்.சி உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
After working with Sundar C in Theeya Velai Seiyyanum Kumaru (TVSK) and Aranmanai, Hansika is all set to join hands with all set to join hands with the director again. The yetto-be-titled film, which stars Vishal in the lead, is likely to go on floors from September. Hansika confirms, "Yes, I'm doing Sundar sir's film with Vishal, and I'm happy to be working with him for the third time in a row."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos