»   »  "ஹேப்பி பர்த்டே" சொன்ன சிம்பு... "தேங்க்ஸ்" சொன்ன ஹன்ஸ்!

"ஹேப்பி பர்த்டே" சொன்ன சிம்பு... "தேங்க்ஸ்" சொன்ன ஹன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்டி குஷ்பு என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகை ஹன்சிகா இன்று தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. அதனைத் தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கை நிறைய படங்களோடு தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள ஹன்சிகாவிற்கு இன்று 24வது பிறந்தநாள்.

ஹன்சிகாவிற்கு பிரபலங்கள் பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா வாழ்த்து...

திரிஷா வாழ்த்து...

திரிஷாவும், ஹன்சிகாவும் அரண்மனை-2ம் பாகத்தில் ஒன்றாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், திரிஷா தனது வாழ்த்து செய்தியில், ‘என்னுடன் நடித்து வரும் என் பிரியமான தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பைத்தியக்காரத்தனமான ஜோக்குகளுக்கு கூட விழுந்து விழுந்து சிரிக்கும் என் தோழியை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யா...

ஆர்யா தனது வாழ்த்துச் செய்தியில், ‘ஹேப்பி பர்த்டே ஹன்சு டார்லிங். அரண்மனை மற்றும் ரோமியோ ஜூலியட் போன்று மேலும் நிறைய படங்களை வரும் ஆண்டுகளில் நீ தர வேண்டும்' என வாழ்த்தியுள்ளார்.

ஹேப்பி பர்த்டே...

இவர்கள் தவிர விக்ரம் பிரபு, விவேக், திவ்யதர்ஷினி, ரம்யா உள்பட பலர் ஹன்சிகாவிற்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சிம்பு வாழ்த்து...

நடிகர் சிம்புவும் டிவிட்டர் மூலம் ஹன்சிகாவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதற்கு ஹன்சிகா, ‘தேங்க்யூ சிம்பு' எனப் பதிலளித்துள்ளார்.

காதல்...

காதல்...

வாலு, வேட்டைமன்னன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்த சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்னர் சிலப்பல காரணங்களால் அவர்கள் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்தாலும் வாழ்க.. !

English summary
Actress Hansika is celebrating her 24th birthday today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil