»   »  விஜய்யை ஒவ்வொருவாட்டியும் பார்க்கையில் அவர் வயசு குறைந்து தெரிகிறார்: ஹன்சிகா

விஜய்யை ஒவ்வொருவாட்டியும் பார்க்கையில் அவர் வயசு குறைந்து தெரிகிறார்: ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையதளபதியை தான் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவருக்கு வயது குறைந்தது போன்று தெரிகிறது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் படத்தில் விஜய்யை துரத்தி துரத்தி காதலித்தார் ஹன்சிகா. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து புலி படத்தில் நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹன்சிகா படம் குறித்தும், விஜய் பற்றியும் கூறுகையில்,

விஜய்

விஜய்

நான் ஒவ்வொரு முறையும் விஜய்யை பார்க்கையில் அவருக்கு வயது குறைந்து கொண்டே போவது போன்று தெரிகிறது. இதை அவரிடம் கூறினால் லேசாக அழகாக ஒரு புன்னகை புரிகிறார்.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

விஜய் எந்த ஹீரோயினுடன் நடித்தாலும் அவர்களுக்கும், அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டாகிவிடும். ஒரு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவர் மிகவும் அடக்கமானவர்.

இளவரசி

இளவரசி

புலி படத்தில் நான் இளவரசியாக நடித்துள்ளேன். இளவரசியாக நடிப்பது எளிது அல்ல. ரெடியாக மூன்று மணிநேரம் ஆகும். படம் அருமையாக வந்துள்ளது. டீஸர் வெளியாகும்போது உங்களுக்கே தெரியும் என்றார் ஹன்சிகா.

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவியுடன் தான் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளதை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார் ஹன்சிகா.

English summary
Hansika told that whenever she sees Vijay, he looks younger everytime. The bubbly actress is happy to have shared the screen with Vijay again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil