»   »  அட.. அதுக்குள்ள சுஷ்மிதாவுக்கு 40 வயசாயிருச்சே!

அட.. அதுக்குள்ள சுஷ்மிதாவுக்கு 40 வயசாயிருச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவரான நடிகை சுஷ்மிதா சென் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1975ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர் சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சுஷ்மிதா, அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.

பின்னர் நடிகையான சுஷ்மிதா சென், குழந்தைகளைத் தத்தெடுத்து சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மிஸ்.யுனிவர்ஸ்...

மிஸ்.யுனிவர்ஸ்...

1994ம் ஆண்டு மிஸ்.யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதன் மூலம், இந்தியாவிலிருந்து அந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆனார் சுஷ்மிதா சென்.

கவிதை பாடும் கவிதை...

கவிதை பாடும் கவிதை...

நடிகையான சுஷ்மிதா சென்னிற்கு கவிதைகள் இயற்றுவதும் மிகவும் பிடிக்கும். அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவர் கவிதை எழுதுவார் என்பது தெரியும்.

அழகிய கவுன்...

அழகிய கவுன்...

அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது சுஷ்மிதா அணிந்திருந்த கவுன் அவரது தாயாரால் டிசைன் செய்யப்பட்டது. அதனை பிரபலமில்லாத அவரது டெய்லர் மீனா என்பவர் உருவாக்கி இருந்தார்.

தத்துக் குழந்தைகள்...

தத்துக் குழந்தைகள்...

ரினே மற்றும் அலிஷா என இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. இவர்களில் ரினேவுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை என மருத்துவர்கள் கூறியபோதும், சுஷ்மிதா அவரைத் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையான கதை...

நடிகையான கதை...

பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே சுஷ்மிதாவின் விருப்பமாக இருந்தது. ஆனால், தஸ்தக் படம் மூலம் அவர் நடிகையாகி விட்டார்.

English summary
An inspiration to many, Sushmita is one of the top actresses of the Hindi cinema. Here’s a look at some of the lesser known facts about this former beauty queen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil