»   »  'அவள் உலக அழகியே'... திரிஷாவின் 33 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து!

'அவள் உலக அழகியே'... திரிஷாவின் 33 வது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா இன்று தன்னுடைய 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம் ரசிகர்கள் #HappyBirthdayTrisha என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தேசிய அளவில் ட்ரெண்டடித்து வரும் அந்த ஹெஷ்டேக்கிலிருந்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் சிலவற்றை பார்க்கலாம்.

அவள் உலக அழகியே

'அவள் உலக அழகியே'ன்னு 'லேசா லேசா'வில் பாடல் எழுதிய கவிஞர் உண்மையிலேயே தீர்க்கதீர்க்கதரிசிதான் என்று வியந்து தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார் பிரசன்னா.

தனியாய் வந்தாய்

13 வருடங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் திரிஷாவின் புகழ் சிறிதும் குறையவில்லை என்பதை சுட்டிக்காட்டி வாழ்த்தியிருக்கிறார் மணிகண்டன்.

திரிஷா போல

அழகான எல்லாப் பெண்களாலும் ஹீரோயின் ஆகமுடியும். ஆனால் எல்லா ஹீரோயினாலும் திரிஷாவாக முடியாது என்று அரவிந்த் வாழ்த்தியிருக்கிறார்.

கருகரு விழிகளில்

'என்னை அறிந்தால்' படத்தின் 'மழை வரப்போகுதே' பாடல் வரிகளைப் பகிர்ந்து திரிஷாவை வாழ்த்தியிருக்கிறார் கலீல்.

விண்ணைத்தாண்டி வருவாயா

'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்சிய மறக்கவோ, மறுக்கவோ முடியாது என்று தாரமங்கலம் வசந்த் வாழ்த்தியிருக்கிறார்.

ஜெஸ்சி

ஜெஸ்சிக்கு இன்னைக்கு பர்த்டே சார் என 'விண்ணைத்தாண்டி வருவாயா' சிம்பு புகைப்படத்தைப் பகிர்ந்து ராஜேஷ் வாழ்த்தியிருக்கிறார்.

இதுபோல மேலும் ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துக்களால் #HappyBirthdayTrisha தொடர்ந்து தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்களுடன் இணைந்து திரிஷாவை நாமும் வாழ்த்துவோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரிஷா...

English summary
Today Actress Trisha Celebrating Her 33rd Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actress a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil