»   »  கன்னடத்தில் ஹரிணி!

கன்னடத்தில் ஹரிணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜில் நாயகி ஹரிணி என்ற ஜெனீலியா, இப்போது கன்னடத்திலும் கால் பதித்து கலக்கப் புகுந்துள்ளார்.

பாய்ஸ் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் பாய்ந்தவர் ஹரிணி. முதல் படமே படா சர்ச்சைப் படமாகி விட்டதால் ஹரிணிக்கு தமிழில் பெத்த வாய்ப்பு ஏதும் இல்லாமல் போய் விட்டது.

தமிழ் அத்து விட்டு விட்டதால் தெலுங்குக்குத் தாவினார் ஹரிணி. அப்படியே தனது பெயரையும் ஜெனீலியா என மாற்றி விட்டார். பெயர் மாறிய யோகமோ என்னவோ அதிர்ஷ்டக் கதவு திறந்து ஜெனீலியாவின் மார்க்கெட்டில் தென்றலை உலவ விட்டது.

அவர் சமீபத்தில் நடித்த பொம்மரிலு சூப்பர் ஹிட் படமானது.

இதில் அவருடன் ஜோடி போட்டவர் சித்தார்த். இவரும் பாய்ஸ் மூலம் சினிமாவுக்கு வந்தவர். இப்போதைய தெலுங்கு சினிமா உலகின் முன்னணி இளம் ஹீரோ.

இவரையும், ஜெனீலியாவையும் சேர்த்து வைத்து அங்கு ஏகப்பட்ட வதந்திகள். இருவரும் அதைக் கண்டுகொள்ளாமல் கலக்கி வருகின்றனர்.

இடையில் தமிழில் சச்சின் படத்திலும், சமீபத்தில் பரத்துடன் இணைந்து சென்னைக் காதலிலும் நடித்l ஹரிணிக்கும் வதந்திக்கும் எப்போதுமே ரொம்பப் பொருத்தம்.

பரத்தையும் இவரையும் சேர்த்தும் கூட வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அதை மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று மண்டை ஆட்டவும் இல்லை.

இப்படியாக வதந்தியும், வாழ்க்கையுமாக போய்க் கொண்டுள்ள ஜெனீலியாவுக்கு சமீபத்தில் கன்னடத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் புத்திரன் சிவராஜ்குமாருடன் இணையும் வாய்ப்பு அது. படத்தின் பெயர் சத்யா இன் லவ்.

இப்படத்தின் மூலம் கன்னடத்திலும் கால் பதிக்கும் ஜெனீலியா அப்படியே அங்கும் ஒரு 8 போட முடிவு செய்துள்ளாராம்.

சிவராஜ்குமாருடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil