»   »  சூர்யாவுடன் ஹரிணி!

சூர்யாவுடன் ஹரிணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முக்கா முக்கா மூணு தடவை என்று தமிழில் ஒரு சொல் உண்டு. அதன்படி 3 பக்கா பிளாப் படங்களைக் கொடுத்துள்ள ஜெனீலியா என்ற ஹரிணி இப்போது நான்காவது முறையாக தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்க சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

பாய்ஸ் மூலம் நடிகை ஆனவர் ஜெனீலியா. அப்படத்தில் ஹரிணியாக அறிமுகமான அவர் பின்னர் தனது பெயரை ஜெனீலியா என்று மாற்றிக் கொண்டார். முதல் படத்தில் கவனிக்கப்பட்டாலும் கூட தேறவில்லை ஜெனீலியா.

பின்னர் விஜய்யுடன் இணைந்து நடித்த சச்சின், பரத்துடன் இணைந்த சென்னைக் காதல் ஆகிய படங்களும் மெகா பிளாப் படங்களாக மாறிப் போனதால் நானொரு ராசியில்லாத ராணி என்று புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெனீலியா.

தமிழ்தான் இப்படி தட்டி விட்டு விட்டதே தவிர, தெலுங்கு ஜெனீலியாவை ஒரே தூக்காக தூக்கி விட்டது. அங்கு ஹிட் நாயகியாக மாறிய ஜெனீலியா, படு பிசியாக நடித்து வந்தார்.

குறிப்பாக பொம்மரிலு படத்தில் அவரது நடிப்பு படு விசேஷமாக பாராட்டப்பட்டது. இப்போது கை நிறையப் படங்களுடன் கலகலப்பாக இருக்கிறார் ஜெனீலியா.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ்ப் பட வாய்ப்பு ஜெனீயைத் தேடி வந்துள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கிறார் ஜெனீலியா.

சூர்யா எனக்குப் பிடித்த நடிகர். அவருடன் ஜோடியாக நடிப்பது பெருமையாக உள்ளது. இந்தப் படம் எனது ராசியில்லாத நடிகை என்ற இமேஜை துடைத்தெறிய உதவும் என்று நம்புவதாக கூறுகிறார் ஜெனீலியா.

துடைத்தெறிவதால் எந்த லாபமும் இல்லை, அவிழ்த்தெறிவதுதான் கோலிவுட்டில் கொடி உயர்த்த ஒரே வழி என்று சில கோலிவுட் குசும்பர்கள் ஜெனீலியாவுக்கு அறிவுரை கூறுகின்றனராம்.

வாரணம் ஆயிரம் படத்தை ஆப்கானிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வைத்துப் படமாக்கவுள்ளாராம் கெளதம் மேனன்.

மேனனைப் பற்றிய இன்னொரு மேட்டர். முதல் படமான மின்னலே வந்தபோது வெறும் கெளதம் என்று மட்டுமே டைட்டிலில் போட வைத்தார் கெளதம். பின்னர் மெதுவாக மேனனை வெளியே கொண்டு வந்து கெளதம் மேனன் என டைட்டிலில் பெயர் வந்தது.

இப்போது கெளதம் வாசுதேவன் மேனன் எனது தனது பெயரை மாற்றிக் கொடுள்ளார் கெளதம். பச்சைக்கிளி முத்துச்சரம் சரியாக போகாததால், நியுமரலாஜிப்படி பெயர் மாற்றமா என்று கெளதமிடம் கேட்டால், அப்படி எல்லாம் இல்லை. எனது பெயருடன், எனது தந்தையின் முழுப் பெயரையும் இணைத்துப் போட ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்.

பச்சைக்கிளி முத்துச்சரம் தோல்விப்படமே இல்லை. பி சென்டர்களில் இன்னும் கூட சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது (இது பி சென்டர் ரசிகர்களுக்குத் தெரியுமா?). சரத்குமாருடன் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்வேன் என்றார் கெளதம் வாசுதேவன் மேனன்.

கெளதம் பாதி மலையாளி பாதி தமிழராம். அப்பா மலையாளி, அம்மா தமிழ். கெளதம் படித்தது எல்லாம் திருச்சியில் தானாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil