»   »  முன்னாள் ஹரிணி.. இன்னாள் ஜெனலியா..

முன்னாள் ஹரிணி.. இன்னாள் ஜெனலியா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படம் ஊத்திக் கொண்ட செண்டிமெண்டோ என்னவோ விஜய் நடிக்கும் "சச்சின் படத்தில் ஹரிணி என்ற பெயரைஒதுக்கிவிட்டு ஜெனலியா டிசோசா என்ற சொந்தப் பெயரிலேயே ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ஹரிணி.. ஸாரி ஜெனலியா.

அடிப்படையில் கோவாவைச் சேர்ந்த இந்த பால்கோவா வளர்ந்தது மும்பையில். அப்புறம் படிப்போடு மாடலிங், டிவிவிளம்பரங்கள், ஆட்டம், பாட்டம் என மும்பை கலாச்சாரத்தில் ஊறியவர். பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவில் ஈசியாகநுழையலாம் என்பதால் தெலுங்கிலும் தமிழிலும் நீண்ட காலமாக ட்ரை கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஷங்கர் மூலம்அடித்தது சான்ஸ்.

பாய்ஸ் படத்தில் 5 பசங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கும் ஹீரோயினானார். ஜெனலியாா டிசோசா என்றால் படத்தில் வரும்வில்லனின் பெயர் என்று நம்ம ஊர் மக்கா நினைத்துவிடுவார்கள் என்பதால் நல்ல மாடர்ன் பெயராக தேர்வு செய்து, இவரைஹரிணியாக்கினார்.

படம் சும்மா சொல்லக் கூடாது. மாபெரும் தோல்வி அடைந்தது. கண்ணாபின்னவென செலவழித்த தயாரிப்பாளர்ஏ.எம்.ரத்னத்துக்கு மிஞ்சியது 5 ரூம் நிறைய பிலிம் ரோல்கள் மட்டுமே. செல்லுலாய்ட் பிலிமில் அவ்வளவு அடிகளை சுட்டுத்தள்ளியிருந்தார் ஷங்கர். அதை அப்படியே எடைக்குப் போட்டால் கூட ரத்னத்துக்கு 5,000 ரூபா கூட தேறாது.

இப்படி மிக ராசியான படத்தில் அறிமுகமான ஹரிணியை செண்டிமென்ட்பாக்கமான கோடம்பாக்கம் ஏறெடுத்தாவது பார்க்குமா.ஹூஹும்.. சுத்தமாக ஒரு படமும் கிடைக்கவில்லை.

ஆனால், தமிழில் வாய்ப்பிழப்போருக்கு வாழ்வு தரும் தெலுங்கு ஹரிணியையும் கைவிடவில்லை. அங்கு பெரிய பெரியடோப்பாக்களுடன் பிலிம் ரோல்களை வாட்டி எடுத்து வரும் பாலகிருஷ்ணா உள்ளிட்ட மெகா (சைசிலும்) ஹீரோக்களுடன்நிறைய படங்கள் கிடைத்தன. விறுவிறுவென முன்னணிக்கு வந்துவிட்டார் ஹரிணி. ஆனால், அங்கு இவரது பெயர் ஜெனலியா.

தனது சொந்தப் பெயர் தந்த ராசியால் தெலுங்கில் நிலைத்துவிட்ட ஹரிணியை இப்போது விஜய் மீண்டும் தமிழுக்குக் கொண்டுவருகிறார். சச்சின் படத்தில் விஜய்யின் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். இன்னொருவர் பிபாசா என்பதுஉங்களுக்குத் தெரிந்தது தான்.

தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் இவர் தனது பெயரை ஜெனலியா என்றே வைக்கும்படி டைரக்டர் ஜான் மகேந்திரனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

படத்தில் பிபாசாவுடன் தீவிர கிளாமர் மோதலில் இருக்கும் ஜெனலியாவுக்கு தொடர்ந்து தமிழ்ப் படங்கள் செய்ய ஆசையாம்.

ஜான் யாார் தெரியுமல்ல.. தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் மகன் தான். இவரை சினிமாவில்இயக்குனராக அறிமுகப்படுத்துவது கலைப்புலி எஸ்.தாணு.

தமிழப் புத்தாண்டில் ரஜினியின் "சந்திரமுகி மற்றும் கமலின் "மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய மெகா ஸ்டார் படங்களோடு சச்சினும்மோதுகிறது. சந்திரமுகி வருதே என்று இயக்குனர் கவலைப்பட்டாராம், ரிலீஸை தள்ளிப் போடலாமா என்றும் யோசித்தாராம்.ஆனால், மோதியே தீருவது என்ற முடிவெடுத்தது விஜய் தானாம்.

காரணம் சச்சின் கதை மீது விஜய்க்கு இருக்கும் நம்பிக்கை என்கிறார்கள். தந்தையைப் போலவே கதையில் ஆழம், அழகானவிசுவல் டேஸ்டுடன் படத்தை எடுத்து வருகிறார் ஜான்.

பாடல் மற்றும் சில லவ் சீன்களுக்காக அயர்லாந்துக்கு சென்று படமாக்கியுள்ளார்களாம். இந்தப் பகுதியில் முதன்முதலாகபடமாக்கப்பட்ட தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

கேமராவைக் கையாள்வது ஜீவா. ஜிராபி என்ற அதிநவீன கிரேனைக் கொண்டு பாடல் காட்சிகளை எடுத்துள்ளாராம். இந்தக்கிரேன் 360 டிகிரி சுற்றக் கூடியது. தமிழ்ப் படங்களில் இந்தக் கிரேன் பயன்படுத்தப்படுவது இது தான் முதல் முறையாம்.

படம் ஏகப்பட்ட செலவுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிபாசாவுக்கு செலவு செய்யவே தனியாக 10 தயாரிப்பாளர்கள்வேண்டும் என்கிறார்கள். எல்லா வசதிகளும் கொண்ட 5 ஸ்டார் ஹோட்டலில் உயர் தரமான ரூமில் தான் தங்குகிறார்.அவ்வளவுக்கு அவ்வளவு ஒத்துழைப்பும் தந்துவிடுகிறார். இதனால் கணக்கு பார்க்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் நடிக்கப் போகும் படம் சிவகாசி. சமீபத்தில் வெளியான திருப்பாச்சி படம் சூப்பர்ஹிட்டானதையடுத்து அதை இயக்கிய பேரரசுக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் போட்ட விஜய் அவரையே அடுத்த படத்தையும்இயக்கச் சொல்லிவிட்டார்.

படத்துக்கு "சிவகாசி என்று பெயர் வைக்கச் சொல்லிவிட்டாராம்.

திருப்பாச்சி.. சிவகாசி.. அடுத்த படத்துக்கு பேரு ஆச்சியா? விஜய் சார்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil